search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு போராட்டம்"

    • சிதைக்கப்பட்ட மாநிலத்தை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவேன்.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் நாசகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது அரசின் கண்மூடித்தனமான முடிவுகளுக்கு ஆந்திரா பலியாகி உள்ளது.

    ஜெகன் மோகன் ரெட்டி தனது திறமையின்மை மற்றும் பழிவாங்கும் மனப்பான்மையால் போலவரம் திட்டத்தையும், அமராவதியையும் முற்றிலுமாக அழித்துவிட்டார்.

    தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து சவால்களையும் முறியடித்து, மக்கள் நலனுக்கான சொத்துக்களை உருவாக்கும்.

    ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்தார்கள். அதுபோல ஆந்திர மாநிலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஏன் மக்கள் ஒன்றிணைய முடியவில்லை.

    சிதைக்கப்பட்ட மாநிலத்தை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவேன்.

    "மக்களுக்காக இன்னும் என்ன செய்ய முடியும் என்பதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்," மாநிலத்தை பிரித்ததை விட, ஜெகன் அரசின் திறமையற்ற ஆட்சியால் மாநில மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    "நான் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியின் நாசகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்".

    தற்போது, தெலுங்கானாவின் தொலைதூரப் பகுதிகளில் கூட ஒரு ஏக்கருக்கு 50 கோடி ரூபாய், ஆந்திராவில் 10 ஏக்கருக்கு கூட இந்தத் தொகை கிடைப்பது மிகவும் கடினம் என்ற நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×