என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள சேதம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் எம்.எல்.ஏவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர்.
    • சம்பவத்தால் எம்.எல்.ஏ.வும் அவருடன் வந்திருந்த கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அம்பாலா:

    டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அரியானா மாநிலத்திலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அம்பாலா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

    வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றார். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.

    இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜனநாயக் ஜனதா என்ற கட்சியின் எம்.எல்.ஏ. இஸ்வார்சிங் குலா என்ற பகுதிக்கு வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக சென்றார், அவருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் போலீசார் சென்றனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தடுப்பணை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும், ஆனால் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கோபத்துடன் அவர்கள் கூறினார்கள்.

    அந்த சமயம் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் திடீரென ஆவேசத்துடன் இஸ்வார்சிங் எம்.எல்.ஏ வை பார்த்து "இப்ப எதுக்கு இங்கே வந்தீங்க" எனக்கூறி அவரை தாக்கினார். உடனே போலீசார் அந்த பெண்ணை மேலும் தாக்கிவிடாமல் இருப்பதற்காக தடுத்து நிறுத்தினார்கள்.

    இந்த சம்பவத்தால் எம்.எல்.ஏ.வும் அவருடன் வந்திருந்த கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தன்னை தாக்கிய போதும் அந்த பெண்ணை மன்னித்து விட்டதாகவும், அதனால் அவர் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் இஸ்வார் சிங் எம்,எல்.ஏ போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.

    அரியானாவில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×