என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பழனி நாடார்"
- மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
- தென்காசி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டன.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எனவே தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, தபால் ஓட்டுக்களை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி தென்காசி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டன. மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி நாடார் 1606 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் 673 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, அறிக்கையாக தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.