என் மலர்
முகப்பு » பாகிஸ்தானியர் கைது
நீங்கள் தேடியது "பாகிஸ்தானியர் கைது"
- எல்லைக்குள் கவனக்குறைவால் நுழைந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- அவரிடம் இருந்து எந்த ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கமிர்புரா கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் கவனக்குறைவால் நுழைந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். எல்லை பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து எந்த ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. விசாரணைக்கு பிறகு மனிதாபிமான அடிப்படையில் அவர் குர்தாஸ்பூர் செக்டரில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
×
X