search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்பி பாலா"

    • நடிகர் பரத் தற்போது ‘லவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வரவுள்து. இதையடுத்து இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.


    இதில் நடிகர் பரத் பேசியதாவது, இங்கு எனது 50-வது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது.


    படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சினைகள் வந்து நிற்கிறது. மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன், அது தான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது, ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும். என் இயக்குனர் தயாரிப்பாளர் ஆர்.பி. பாலா சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு நன்றி என்று பேசினார்.


    மேலும், நடிகை வாணி போஜன் பேசியதாவது, நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி என்று பேசினார்.

    ×