search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெய்லர் ஸ்விப்ட்"

    • உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்.
    • எலான் மஸ்கின் மகள் வில்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்தார். இதையடுத்து, டெய்லர் ஸ்விஃப்ட்டின் இன்ஸ்டா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் வென்றுவிட்டீர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன், அதோடு உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்" என்று பதிவிட்டார்.

    எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வரிசையில், எலான் மஸ்கின் மகள் வில்சன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது குறித்த பதிவில் அவர், "நானும் அந்த பதிவை பார்த்தேன். அதில் நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை. இது மிகவும் வெளிப்படையானது, என்பதை நீங்கள் பார்க்கவில்லை என்றால், நீங்கள் பிரச்சனையின் ஒரு அங்கமாக இருக்கின்றீர்கள். மக்கள் உங்களிடம் அப்படி பேசுவதை அனுமதிக்க வேண்டாம். இது அருவருப்பாக உள்ளது."

    "கமலா ஹாரிஸ்-ஐ டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரிப்பதற்கு இதை விட சிறந்த சமயம் எதுவும் இருக்க முடியாது. தேர்தலில் ஸ்விஃப்டீஸ் வாக்களிப்பதை காண காத்திருக்கிறேன். நீலத்திற்கு ஓட்டுப்போடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

    • மலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.
    • 33 வயதான டெய்லர் ஸ்விஃப்ட் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.

    டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அவரது இன்ஸ்டா பதிவில், தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

    33 வயதான டெய்லர் ஸ்விஃப்ட் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆதலால் அவருக்கு குழந்தைகள் இல்லை. அதை குறிக்கும் விதமாக Taylor Swift - Childless Cat Lady என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, டெய்லர் ஸ்விஃப்ட்டின் இன்ஸ்டா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நீங்கள் வென்றுவிட்டிர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன், அதோடு உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெய்லர் ஸ்விப்ட் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
    • டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட். இவரது பாடல்களுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.

    அந்த வகையில், டெய்லர் ஸ்விப்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியா நாட்டில் மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவரது இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் சதித்திட்டம் தீட்டியதை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இசை நிகழ்ச்சியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அவர்களது வீட்டில் பல்வேறு ரசாயனங்கள் மற்றும் பொருட்களை போலீசார் கண்டறிந்தனர். அவை வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

    தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த 10 நாட்களுக்குள் திருப்பித் தரப்படும் என்றனர்.

    • பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து கான்சர்ட் நடந்துள்ளது.
    • 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர்

    அமரிக்கவைச் சேர்த்த பிரபல பாடகியான டெய்லர் ஸ்விப்ட் இசைத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஐகானாக உள்ளவர். எல்லைகள் தாண்டி உலாமெங்கிலும் இவரின் பாடல்களுக்கு பலர் பைத்தியாக உள்ளனர். தனது பாடலக்ளை தானே இயற்றி கான்சர்ட்களில் பாடிவரும் டெய்லர் ஸ்விப்ட் நின்றால் செய்தி உட்கார்ந்தால் செய்தி என ஆகிவிட்ட நிலையில் பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து நடந்த இவரின் கான்சர்ட்டில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

     

    அந்த கான்சர்ட்டில் தனது சிறந்த பாடல்களில் ஒன்றான 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர். இந்த பாடல் சுமார் 10 நிமிட நீளம் உடையது ஆகும். 'All Too Well' பாடலை விடமால் தம் கட்டி சிவப்பு நிற ஆடையில் ஜொலித்த டெய்லர் ஸ்விப்ட் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவரது வாய்க்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பூச்சி நுழைந்ததால் பாடலைத் தொடர அவர் சிரமப்பட்டார்.

    இடையில் பாடுவதை நிறுத்திவிட்டு இருமத் தொடங்கிய டெய்லர் ஸ்விப்ட், நான் ஒரு பூச்சியை விழுங்கிவிட்டேன், நீங்கள் தொடர்ந்து பாடுங்கள் என்று ரகிகர்களிடம் கூறினார். பின்னர் நிலைமையை சமாளித்துக்கொண்டு மீண்டும் அவர் பாடத்தொடங்கினார்.இந்த சமபவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கான்சர்ட்டில் ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், மிலா குனிஸ், ஆஸ்டோன் குட்சர், டெய்லர் ஷிப்டட்டின் காதலன் கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டது குறிபிடித்தக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இசைத்துறை மூலம் பாப் கலாசாரம், பொருளாதாரம் என அனைத்திலும் டெய்லர் ஸ்விப்ட்டின் தாக்கம் குறித்து முதல் கல்வி கருத்தரங்கை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது.
    • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்பட 7 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அறிஞர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விப்ட். 33 வயதான இவர் கிராமி விருதை வென்றுள்ளார். பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தனது இசை சுற்றுப்பயணத்தை சமீபத்தில் தொடங்கினார்.

    5 கண்டங்கள், 17 மாநிலங்களில் 131 இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில், கொரோனாவுக்கு பிறகு முடங்கிய பொருளாதாரம் மீண்டு வருவதாக ஏற்கனவே பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இசைத்துறை மூலம் பாப் கலாசாரம், பொருளாதாரம் என அனைத்திலும் டெய்லர் ஸ்விப்ட்டின் தாக்கம் குறித்து முதல் கல்வி கருத்தரங்கை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது. அடுத்தாண்டு (2024) பிப்ரவரி 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆன்லைன் வழியாகவும் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்பட 7 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அறிஞர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் பாடகியான டெய்லர் ஸ்விப்ட் கிராமி விருது பெற்றவர்.
    • உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஸ்விப்ட் காரணம் என குறிப்பிடப்படுவது இது முதல் முறை அல்ல.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பிரபல பாப் பாடலாசிரியை மற்றும் பாடகி டெய்லர் ஸ்விப்ட் (33). இவர் கிராமி விருது பெற்றவர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் அறிக்கை ஒன்றில் அவரது பெயர் இடம்பிடிக்கும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    ஈராஸ் டூர் என்ற தனது சுற்றுப்பயணத்தின் மூலம் 17 மாநிலங்கள், 5 கண்டங்களில் 131 கச்சேரிகள் செய்ய உள்ளார். அவரது பயணத்தால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தால் பெடரல் ரிசர்வ் வங்கியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் பீஜ் புத்தகம் எனப்படும் தற்போதைய பொருளாதார நிலைமைகள் பற்றிய அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து தற்போதுதான் பிலடெல்பியாவில் ஓட்டல் முன்பதிவுகள் உயர்ந்துள்ளது. சுற்றுலாத் துறையில் மெதுவான மீட்சியே இருந்தபோதிலும், நகரத்தில் டெய்லர் ஸ்விப்டின் இசை நிகழ்ச்சிகளுக்கு வந்த பார்வையாளர்களின் வருகை காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது என தெரிவிக்கிறது.

    ஸ்விப்ட் இந்த ஆண்டு மே 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிலடெல்பியாவில் உள்ள 67,000 இருக்கைகள் கொண்ட அமெரிக்க கால்பந்து மைதானமான லிங்கன் பைனான்சியல் பீல்டில் 3 நிகழ்ச்சிகளை நடத்தினார். இதற்கு உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஸ்விப்ட் காரணம் என குறிப்பிடப்படுவது இது முதல் முறை அல்ல.

    கடந்த மாதம், சிகாகோவின் சுற்றுலா அமைப்பான சூஸ் சிகாகோ, ஜூன் மாத முதல் வார இறுதியில் ஓட்டல் பதிவுகள், ஸ்விப்ட் நிகழ்ச்சிகளின் காரணமாக அதற்கு முன்பிருந்த பதிவுகளை விட அதிகமாக இருந்ததாக அறிவித்தது.

    தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்துவரும் ஸ்விப்ட், தற்போது சாதனை எண்ணிக்கையாக கருதப்படும் பில்லியன் டாலர் வசூலை எட்டக்கூடிய தூரத்தில் இருக்கிறார்.

    கடந்த 2018-ம் ஆண்டில் பேர்வெல் யெல்லோ ப்ரிக் ரோட் என்ற சுற்றுப்பயணத்தால் 910 மில்லியன் டாலர் வசூலித்த புகழ்பெற்ற பாடகர் எல்டன் ஜானின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×