search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஸ் சிலிண்டர்"

    • ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
    • தனது வீட்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அவினாசி,ஜூலை.16-

    அவினாசியை அடுத்து அணைப்புதூர் எருமைக்காடு தோட்டம்கணபதிசாமி காம்பவுண்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 38). இவரும் இவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் .இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டு ஆகிறது. இவர்களது மகள் கோவையில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது மனைவி தனது மகளைப் பார்க்க கோவைக்கு சென்று விட்டார். ராஜேந்திரன் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. எனவே வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே பார்த்தபோது ராஜேந்திரன் தீக்காயங்களுடன் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.விசாரணையில் ராஜேந்திரன் தனது வீட்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்தில் நைலான் கயிறு சுற்றி இருந்தது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    ×