search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயன் படம்"

    • போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    புதுடெல்லி:

    எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர்.

    95 ஓவல் வடிவ காப்ஸ்யூல்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்குள் போதை பொருள் இருப்பது தெரிந்தது. 511 கிராம் எடையுள்ள போதை பொருள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    இதையடுத்து நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அயன் பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி அப்பெண் கடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×