search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கூலி தொழிலாளி"

    • பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார்.
    • விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ் 2 வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார்.

    பின்னர் ஏழ்மை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் அவரது தாய் மாமாவான சிவப்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கும் நிலம் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

    ஆனாலும் பாரதிக்கு எப்படியாவது மேற்படிப்பு படித்து கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தார்.

    அவரும் பாரதியை மேற்படிப்பு படிக்க வைக்க ஊக்கப்படுத்தினார். தன்னுடைய மனைவி வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார்.

    இதனால் அனந்தபூரில் உள்ள கல்லூரியில் பாரதியை சேர்த்து படிக்க வைத்தார். கணவரின் நிதி சுமையை குறைக்க வேண்டும் என்று எண்ணிய பாரதியும் விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைக்குச் சென்றார்.

    பின்னர் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார். கல்லூரி பேராசிரியர்களும் பாரதியை நன்றாக படிக்க ஊக்கப்படுத்தினர்.

    இதனால் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதி அதே பாடப்பிரிவில் பி.எச்.டி. (டாக்டர்) பட்டம் பெற்றார். இதன்மூலம் தன்னுடைய கணவருக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

    விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார்.

    கல்லூரி பேராசிரியராக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் கூறினார்.

    • ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது தேன் நிறத்திலான கல் ஒன்று கிடைத்தது. அதை எடுத்த பெண் அங்குள்ள நகை கடைக்கு சென்று பரிசோதித்தார். அப்போது வைரக்கல் என தெரிய வந்தது.

    வயல் வெளியில் கிடைத்த வைரத்தை நகை வியாபாரி ரூ.25 லட்சத்திற்கு வாங்கினார். வயல்வெளியில் வைரம் கிடைத்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியது. இதனால் ஆண்கள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு வயல்களில் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் வயல்வெளியில் வைரத்தை தேடியதால் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தகவல் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவியது.

    இந்நிலையில் பக்கத்து ஊரான மத நாதபுரத்தை சேர்ந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் அவரது வயல்வெளியில் வைரத்தை தேடினார். அவருக்கு 2 வைரக்கல் கிடைத்தது. தொடர்ந்து பொதுமக்கள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    ×