என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் கொலை"
- கிருஷ்ணா கொலை செய்யப்பட்டது குறித்து அவர்களது ஊர் முழுவதும் தகவல் பரவியது.
- வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், வெல்கம் மண்டலம் ஊட்டவோலுவை சேர்ந்தவர் கிருஷ்ணா.அங்குள்ள உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட நாயுடு. இருவரும் ஒரே அரசியல் கட்சியில் நிர்வாகிகளாக இருந்து வந்தனர்.
மேலும் வெங்கட நாயுடு அரசு கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். தனது அரசியல் வளர்ச்சிக்கு கிருஷ்ணா இடையூறாக இருப்பதாக வெங்கட நாயுடு எண்ணினார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் தனது பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்து சென்ற வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினர் உங்களது காரில் கிருஷ்ணாவின் பைக் மீது மோதினர். இதில் கிருஷ்ணா நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது தாங்கள் கொண்டு வந்த இரும்பு ராடால் கிருஷ்ணாவை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கிருஷ்ணா கொலை செய்யப்பட்டது குறித்து அவர்களது ஊர் முழுவதும் தகவல் பரவியது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வெங்கட நாயுடுவின் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட நாயுடுவின் குடும்பத்தினரை பின்பக்க வாசல் வழியாக பத்திரமாக மீட்டு சென்றனர்.
வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளது.
- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு மருத்துவமனைக்குள் கத்திக்குத்து...
அரசு பள்ளிக்குள் கத்திக்குத்து...
நீதிமன்ற வளாகத்திற்குள் கத்திக்குத்து....
இன்று தமிழக ஆட்சியில்
கருத்து குத்துகளுக்கு
உடனே நடவடிக்கை
கத்திக்குத்துகளுக்கு இல்லை நடவடிக்கை
இதுவே இன்றைய தமிழக அரசின்
வாடிக்கை....
இதை திராவிட மாடல் என்று சொல்வது வேடிக்கை.......
சட்டம் ஒழுங்கை ஒழுங்காக பாருங்கள் என்பது.....
மக்களின் கோரிக்கை..
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை.
- வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்றும் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் பேரழிவு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது.
தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளைத் திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.