என் மலர்
நீங்கள் தேடியது "லேன்ட் ரோவர்"
- வெலார் பேஸ்லிப்ட் மாடலில் பிக்சல் எல்இடி ஹெட்லைட்கள், ரிவைஸ்டு டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.
- புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது.
லேன்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் விலை ரூ. 93 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் ஒற்றை HSE வேரியன்ட் மற்றும் இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தெரிகிறது. புதிய பேஸ்லிப்ட் மாடலின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் அதிகம் ஆகும்.
வெலார் பேஸ்லிப்ட் மாடலில் பிக்சல் எல்இடி ஹெட்லைட்கள், ரிவைஸ்டு டேடைம் ரன்னிங் லைட்கள், பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. காரின் உள்புறம் 11.4 இன்ச் டச்-ஸ்கிரீன் பிவி ப்ரோ சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் மோட்டார் 250 ஹெச்பி பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் மோட்டார் 204 ஹெச்பி பவர், 430 நீயூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 217 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. டீசல் என்ஜின் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும்.
- புதிய வெலார் மாடலின் வெளிப்புறம் ரிவைஸ்டு கிரில், பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன.
- புதிய வெலார் மாடலிலும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ரேன்ஜ் ரோவர் வெலார் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஆடம்பர எஸ்யுவி மாடல் ஒற்றை டாப் என்ட், டைனமிக் HSE வேரியன்டில் கிடைக்கிறது. இத்துடன் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த காரின் வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது.
புதிய வெலார் மாடலின் வெளிப்புறம் ரிவைஸ்டு கிரில், பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் சடார் கிரே, வெரிசைன் புளூ, சன்டோரினி பிளாக் மற்றும் ஃபுஜி வைட் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றை டூயல் டோன் ரூஃப் நிறங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
உள்புறம் புதிய வெலார் மாடலில் லேன்ட் ரோவர் நிறுவனத்தின் பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த அம்சத்தை பெறும் முதல் லேன்ட் ரோவர் கார் இது ஆகும். இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், ஆக்டிவ் ரோட் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
பவர்டிரெயினை பொருத்தவரை புதிய வெலார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பெட்ரோல் மோட்டார் 296 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 201 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் டெரைன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.