என் மலர்
நீங்கள் தேடியது "வி.சி.க.வினர்"
- அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
- கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் பகண்டை கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் முருகவேல். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் வழுதாவூர் சாலையில் தொராவி கிராமம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ம.க. உறுப்பினர் முருகவேலை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவலறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் துரைராஜ், மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்த ப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தேடி வருகின்றோம். விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்ததனர். அதன் பேரில் காலை 9 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு வி.சி.க.வினர் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக விழுப்புரம் வழுதாவூர் சாலையில் காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.