என் மலர்
நீங்கள் தேடியது "மூதாட்டியிடம் பணம் பறித்த வாலிபர்"
- வாலிபர் போலீஸ் எனக்கூறி மூதாட்டி துணிப்பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
- கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வாலிபர் மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. மூதாட்டியான இவர் தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக போலீஸ் குடியிருப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போதுஅங்கு வந்த வாலிபர் தான் போலீஸ் என்றும் உங்கள் பையில் உள்ளதை சோதனையிட வேண்டும் என கூறினார். மேலும் மூதாட்டி துணிப்பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார்அளிக்கப்ப ட்டது.
அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வாலிபர் மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.
அதனை வைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைவரிசை காட்டிய வாலிபர் சிக்கினார். போலீசார் விசாரணையில் அவர் கோட்டூர் மண்டுகருப்பணசாமி கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணு என தெரிய வந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து போலீசார் விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.