search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபி அமைச்சர்"

    • பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
    • சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

    பின்னர், சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். பேக்கரி சட்டவிரோதமாக இயங்கி வந்தது தெரியவந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையால் பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் புல்டோர் மூலம் பேக்கரியை இடித்தது.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்த அமைச்சரும், நிஷாத் கட்சி தலைவருமான சஞ்சய் நிஷாத், செய்தியாளர்கள் முன் மனம் உடைந்து அழுதார். அப்போது அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சி மொயீத் கானை கட்சியில் இருந்து நீக்கவோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எதுவும் கூறுவோ இல்லை. குற்றவாளியைப் பாதுகாக்கிறது என்று கூறினார்.

    • தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
    • தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது.

    நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார்.

    பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:-

    தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும்.

    அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×