என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அஞ்சு"
- நஸ்ருல்லாவுடன் சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு.
- இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.
பெஷாவர் :
கணவர், குழந்தைகளை கைவிட்டு பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் மதம் மாறி முகநூல் காதலரை கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டார்.
காதலரை நாடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், இங்கேயே வாழ ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்துவிட்டு காத்திருக்கிறார். இதை அப்படியே புரட்டிப்போட்டது போல இருக்கிறது, அஞ்சுவின் கதை.
உத்தரபிரதேச மாநிலம் கைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த அஞ்சு (வயது 34).
இவர் திருமணத்துக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் கணவர் அரவிந்த்குமாருடன் வசித்தார். இந்த தம்பதிக்கு 15 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு அஞ்சுவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் முகநூலில் (பேஸ்புக்) அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை, ஜெய்ப்பூர் நகருக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு கிளம்பிச் சென்றார் அஞ்சு. ஆனால் அவர் சென்றது, பாகிஸ்தானில் உள்ள தனது முகநூல் காதலரை காண்பதற்கு. அதற்காக, குடும்பத்தினருக்கு தெரியாமல், முறைப்படி விண்ணப்பித்து ஒரு மாத விசாவையும் அஞ்சு பெற்றுள்ளார். நஸ்ருல்லாவின் சொந்த ஊர், கைபர் பக்துங்வா மாகாணம் அப்பர் திர்மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற குக்கிராமம். அறிவியல் பட்டதாரியான நஸ்ருல்லா, 5 சகோதரர்களில் இளையவர். திருமணம் ஆகாதவர்.
நஸ்ருல்லா வீட்டுக்கு சென்று தங்கிய அஞ்சு, அங்கிருந்தபடி, தான் அவரை காதலிப்பதாக பேட்டியும் அளித்தார். ஆனால் 'தோழி'யான அஞ்சுவை திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறினார்.
ஆனால் ஒரே நாளில் அதிரடியாக காட்சிகள் மாறின.
'பாத்திமா' என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய 'அஞ்சு', நேற்று மாவட்ட கோர்ட்டில் நஸ்ருல்லாவின் உறவினர்கள், வக்கீல்கள், போலீசார் முன்னிலையில் முறைப்படி அவரை கரம் பிடித்தார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.
நேற்று முன்தினம், நஸ்ருல்லாவுடன் கைபர் பக்துங்வா சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு. அங்கு போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், கரம் கோர்த்தபடி அந்த ஜோடி உற்சாகமாக உலா வந்தது.
இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள போவுனா கிராமத்தில் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர், 'எனது மகளுடன் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு நேரடித் தொடர்பில்லை. அவர் மனரீதியாக பிரச்சினை உள்ளவர். விசித்திரமான நடத்தை கொண்டவர். என் மருமகன் எளிமையான மனிதர். அவர் மீது தவறு எதுவும் கிடையாது' என்றார்.
இதற்கிடையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அஞ்சு, 'நான் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். இந்தியாவில் உள்ள எனது உறவினர்களையும், குழந்தைகளையும் ஊடகத்தினர் யாரும் தொந்தரவுபடுத்த வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய மண்ணில், புது வாழ்வை தொடங்கிவிட்டார், 'பாத்திமா' ஆகிவிட்ட 'அஞ்சு'. ஆனால் இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.
- அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு.
- எனது மருமகன் மிகவும் எளிமையான நபர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு அரவிந்த் குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
அஞ்சுவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (29) என்ற வாலிபருடன் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் அஞ்சு குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் முகநூல் நண்பரை பார்க்க முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்று விட்டார்.
இதனால் அவரது கணவர் அரவிந்த்குமார் மற்றும் குழந்தைகள் அஞ்சு எப்போது வருவார் என தெரியாமல் தவிப்புடன் காத்திருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் நஸ்ருல்லாவிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், அஞ்சுவை மணக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவரின் ஒரு மாத கால விசா முடிந்ததும் அவர் இந்தியா திரும்பி விடுவார் என கூறியுள்ளார்.
இந்நிலையில் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தேகன்பூர் நகரில் வசிக்கும் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு. அவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவள் எப்போது பாகிஸ்தான் சென்றாள் என்பது எனக்கு தெரியாது.
அஞ்சு 3 வயதில் இருந்தே உத்தரபிரேதசத்தில் உள்ள ஜலான் மாவட்டத்தில் அவரது தாய்மாமாவுடன்தான் தங்கி இருந்தார். அவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அஞ்சுவுக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்தது. இதனால் அடிக்கடி விசித்திரமான தன்மைகளை செய்து வந்தார்.
எனவே நான் அவளை கண்டுகொள்வது கிடையாது. அதன் பின்னர் அஞ்சுவுக்கு திருமணம் நடந்ததை அறிந்தேன். எனது மருமகன் மிகவும் எளிமையான நபர். ஆனால் அஞ்சு விசித்திரமானவள். அவள் மன உளைச்சலில் இருக்கிறாள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலில் விழுந்துள்ளார்.
- அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார்
பெஷாவர் :
'பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.
அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு (வயது 34) என்ற பெண், திருமணமாகி ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசிக்கிறார்.
இவரும், பாகிஸ்தான் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள அப்பர் திர் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற வாலிபரும் முகநூல் மூலம் நண்பர்களாகினர். இந்த நிலையில் நஸ்ருல்லாவை காண, குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அந்த நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.
அஞ்சுவும், அவரை விசாரித்த பாகிஸ்தான் போலீஸ் அதிகாரியும், அவர் நஸ்ருல்லாவை காதலிப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் அஞ்சுவை மணக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அவரின் ஒரு மாத கால விசா முடிந்தபின் ஆகஸ்டு 20-ந்தேதி இந்தியா திரும்பிவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறியுள்ளார்.
அஞ்சுவை எதிர்பார்த்து ராஜஸ்தானில் அவரது கணவர் அரவிந்த்குமாரும் தங்கள் 15 வயது மகள், 6 வயது மகனுடன் காத்திருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்