என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அஷ்டலட்சுமி"
- சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- முதல் போடோ திருவிழா இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு வன்முறையைத் தவிர்த்து அமைதியின் பாதையை தேர்வு செய்ததற்காக போடோ சமூக மக்களை நரேந்திர மோடி பாராட்டினார். டெல்லியில் நடைபெற்ற முதல் போடோலாந்து திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு போடோ சமூக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து போடோலாந்து மஹோத்சவின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, "போடோ அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, போடோலாந்து பகுதி 'புதிய வளர்ச்சி அலையை' கண்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று கார்த்திகை பூர்ணிமாவின் புனிதமான நாள். இன்று தேவ் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று குருநானக் தேவின் 555வது பிரகாஷ் பர்வ். இந்த சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த தேசத்திற்கும், குறிப்பாக உலகம் முழுவதும் பரவியுள்ள சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
"இன்று நாடு முழுவதும் ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இன்று காலை, பீகாரில் உள்ள ஜமுய் நகரில் பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இப்போது மாலையில், முதல் போடோ திருவிழா இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."
"கடந்த நான்கு ஆண்டுகளில், போடோலாந்தின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, போடோலாந்து வளர்ச்சி அலைகளை கண்டுள்ளது. அமைதி ஒப்பந்தத்தின் நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் முடிவுகளைப் பார்த்து நான் மிகவும் திருப்தி அடைகிறேன்."
"இன்றைய சந்தர்ப்பம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. 50 வருட இரத்தக்களரி, 50 வருட வன்முறை மற்றும் 3-4 தலைமுறை இளைஞர்கள் இந்த வன்முறையில் நுகர்ந்துள்ளனர். பல தசாப்தங்களுக்குப் பிறகு, போடோ இன்று திருவிழாவைக் கொண்டாடுகிறது. 2020 ஆம் ஆண்டில், போடோ அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, கோக்ரஜாருக்கு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பும் பாசமும், நீங்கள் என்னை உங்களில் ஒருவராகக் கருதுவது போல் உணர்ந்தேன். அந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன்."
"போடோலாந்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி சிறப்பு தொகுப்பு வழங்கியுள்ளது. அசாம் அரசும் சிறப்பு வளர்ச்சி தொகுப்பை வழங்கியுள்ளது. போடோலாந்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது."
"என்னைப் பொறுத்தவரை, அசாம் உட்பட முழு வடகிழக்குமே இந்தியாவின் அஷ்டலட்சுமிகள். இப்போது வளர்ச்சியின் சூரியன் கிழக்கு இந்தியாவில் இருந்து உதயமாகும், இது வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும். எனவேதான் வடக்கு கிழக்கில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம். வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண நாங்கள் முயன்று வருகிறோம்," என்று தெரிவித்தார்.
- “நிம்பதீபம்” என்பது இலுப்பை எண்ணெய் விளக்கு ஆகும்.
- மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை தினசரி குளித்த பின்பு,
திருவிளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட,
வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற்று
கணவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வீர்கள்.
நிம்ப தீபம்!
"நிம்பதீபம்" என்பது இலுப்பை எண்ணெய் விளக்கு ஆகும்.
இதைப் பேய்கள் அகலுவதற்காக ஏற்றுவதுண்டு.
மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும்.
சங்கல்பப்படி, மடி, ஆசாரத்துடன் மாரியம்மன் சன்னதியில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
இதைப் புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.
பஞ்ச தீப எண்ணெய்
தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய் மற்றும் பசு நெய் கலந்த எண்ணெய்யே பஞ்ச தீப எண்ணெய் எனப்படும்.
- துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்த தலங்கள் மிக அபூர்வம்.
- ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான ஆலயம்.
துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்த தலங்கள் மிக அபூர்வம். அப்படி ஓர் அபூர்வக் கோயிலாக திருச்சியில் பாலகரை எனுமிடத்தில் துர்க்கைக்கு ஓர் ஆலயம் உள்ளது. ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான ஆலயம் இது.
கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது ஆலயம். முகப்பில் மூன்றடுக்கு ராஜகோபுரம் வரவேற்க உள்ளே நுழைந்ததும் விசாலமான மகாமண்டபம் இறைநாமம் எதிரொலிக்க விசாலமாக இருக்கிறது.
மகாமண்டபத்தின் மேல்புறம் பெரியண்ணசுவாமி, கருப்பண்ண சுவாமி திருமேனிகள் காட்சிதர, வடதிசையில் மதுரைவீரன், பொம்மி, வெள்ளையம்மான் திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன.
அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் சுதை வடிவில் அமைந்துள்ளனர். துவார சக்திகள். அன்னைக்குக் காவலாக இருப்பதால் கம்பீரமும், அதே சமயம் பக்தர்களுக்குத் தடையில்லை எனும்விதமாக கருணையும் ஒரே சேர அமைந்துள்ளனர்.
கருவறையில் இறைவி துர்க்கையம்மன், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறான். அன்னைக்கு நான்கு திருக்கரங்கள். இடது மேல் கரத்தில் சங்கையும், வலது மேல் கரத்தில் சக்கரத்தையும் தாங்கி கீழ் வலது கரதத்தில் சூலத்தை ஏந்தி கீழ் இடது கரத்தில் பாச முத்திரை காட்டி மகிஷனின் சிரசின்மேல் நின்ற கோலத்தில் இளநகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. சிவ, விஷ்ணு சின்னங்கள் இவள் கரத்தில் ஒருசேர அமைந்து இருப்பது சிறப்பு.
பொதுவாக ஒவ்வொரு கோயிலுக்கும் தலமரம் ஒன்றிருக்கும். சில கோயில்களில் இரண்டு மரங்களும் இருப்பதுண்டு. ஆனால், இக்கோயிலில் தலமரமாக ஐந்து மரங்கள் உள்ளன.
பிராகாரத்தில் தெற்கே வினாயகர் திருமேனி மிகப் பெரிய அளவில் உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையும் கிழக்கில் நாகர்கள், அய்யனார் திருமேனிகளும் அமைந்துள்ளன.
இறைவியின் கருவறை விமானத்தைக் சுற்றி அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் அலங்கரிப்பதுடன் நடுநாயகமாய் மூன்று திசைகளில் கிருஷ்ணனின் திருமேனியும் ஒருபுறம் வக்கிர காளியின் திருமேனியும் காணப்படுகின்றது.
இந்த அமைப்பு தனது ஆலயத்தில் தன் சகோதரனான கிருஷ்ணருக்கும் துர்க்கையன்னை இடமளித்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி சிலிர்க்கச் செய்கிறது.
பங்குனி மாத மூன்றாவது ஞாயிறு தொடங்கி மூன்று நாட்கள் துர்க்கை அன்னைக்கு மிகவும் சிறப்பாக திருவிழா நடைபெறும். தைமாதம் மிருகசீரிஷம், நட்சத்திரத்தின்போது அன்னை வீதியுலா வருவதுண்டு. அதற்கு முன்தினம் அன்னைக்கு ஏகதின லட்சார்ட்சனை நடத்துகின்றனர்.
கன்னி பெண்களுக்கு இந்த துர்க்கை அம்மன் கண் கண்ட தெய்வமாக விளங்குவதாக சொல்கின்றனர்.
ஏழு வாரங்கள் ராகு கால பூஜையில் கலந்து கொண்டு தேவியை வழிபடும் கன்னியர்க்கு அந்த ஏழு வாரங்களுக்குள்ளாவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறதாம். அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி மாங்கல்ய பாக்கியம் பெற்ற பக்தைகள் பலர் இதை சிலிர்ப்போடு கூறுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்