என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துவாதசி"
- காலை 3 மணிக்கு பக்தி பாடல்களை பாட வேண்டும்.
- அகத்திக்கீரை பொறியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி,
துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும்.
காலை 3 மணிக்கு பக்தி பாடல்களை பாட வேண்டும்.
3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும்.
சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்துவிட வேண்டும்.
அகத்திக்கீரை பொறியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.
இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.
ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.
- நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன.
- பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை.
திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் `நிலவின் பிறை தினம்' என பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.
அவை முறையே...
பிரதமை - ஒருமை
துதியை - இருமை
திரிதியை - மும்மை
சதுர்த்தி - நான்மை
பஞ்சமி - ஐம்மை
சஷ்டி - அறுமை
சப்தமி - எழுமை
அஷ்டமி - எண்மை
நவமி - தொண்மை
தசமி - பதின்மை
ஏகாதசி - பதிற்றொருமை
துவாதசி - பதிற்றிருமை
திரையோதசி - பதின்மும்மை
சதுர்த்தசி - பதினான்மை
பவுர்ணமி - நிறைமதி
அமாவாசை - மறைமதி
என்பனவாகும்.
பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது. இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறது.
- திதி என்பதே காலப்போக்கில் மருவி தேதி ஆகி இருக்கலாம்.
- பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பர்.
பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:
பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்த செயலையும் சிந்தித்து சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கி சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள்.
துவிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:
துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை ரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.
திரிதியை, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:
திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:
சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்திரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்த காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
பஞ்சமி, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:
பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:
சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள்.
திதி - பலன்கள்
பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை `தேய்பிறை திதி' என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ணமி வரையான பதினைந்து நாட்களை `வளர்பிறை திதி' என்றும் குறிப்பிடுவர்.திதி என்பதே காலப் போக்கில் மருவி தேதி ஆகியிருக்கலாம். இதனை சமஸ்கிருதத்தில் `கிருஷ்ணபட்சம்', `சுக்கிலபட்சம்' என்பர்.
இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.
- பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனில் இருந்து 180 டிகிரியில் இருக்கிறது.
- வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது.
வைகுண்ட ஏகாதசியன்று முக்கியமாக உபவாசம் இருப்பது ஏன்? துவாதசியன்று அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் சாப்பிடவேண்டும் என்பது எதற்காக தெரியுமா?
சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்தொன்பரை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன.
அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம் (வளர்பிறை) எனப்படும். பவுர்ணமியில் இருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன.
அதில் இருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து செல்லுகிறது. நான்காவது நாள் -அதாவது, சதுர்த்தசியன்று சந்திரன் சூரியனில் இருந்து 36 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது.
பதினொன்றாவது நாள் ஏகாதசியன்று சூரியனில் இருந்து 132 டிகிரி பின்னால் இருக்கிறது. பௌர்ணமியன்று சந்திரன் சூரியனில் இருந்து 180 டிகிரியில் இருக்கிறது. மேற்கூறிய நாட்களில் சூரியனில் இருந்து சந்திரன் தொலைவில் விலகிச்செல்லுவதில் புவிஈர்ப்பு சக்தி அதிகமாகிறது.
அந்த சமயத்தில் எப்போதும்போல உணவு அருந்தினால் அது சரியாக செரிக்காது. ஆகையால் நமது முன்னோர்கள் அந்த நாட்களில் விரதம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தூரத்தில் இருக்கிறான். அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் உபவாசம் இருக்கிறோம்.
ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது.
அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் "ஏ" யும், "சி" யும் தேவைப்படும். ஆகவேதான், துவாதசியன்று வைட்டமின் "ஏ" சத்து நிறைந்த அகத்திக்கீரையையும், வைட்டமின் "சி" சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுகிறோம்.
ஒவ்வொரு நாளும் நாம் செய்யவேண்டிய சூரிய நமஸ்காரமும், இருமுறை ஏகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும், நம்முடைய கண்ணொளியைக் காத்து உடல் நலத்தை பேணி வருகின்றன.
- அமாவாசை, பூரணையும் அடுத்து வரும் 13-வது திதி திரயோதசி.
- திரயோதசியை சுக்கில பட்ச திரயோதசி என்றும் அழைப்பர்.
துவாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பன்னிரண்டாவது திதி துவாதசி ஆகும். துவாதச எனும் வடமொழிச் சொல் பன்னிரண்டு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பன்னிரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பன்னிரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் பன்னிரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவாதசித் திதி வரும்.
அமாவாசையை அடுத்துவரும் துவாதசியை சுக்கில பட்ச துவாதசி என்றும், பூரணையை அடுத்த துவாதசியை கிருட்ண பட்ச துவாதசி என்றும் அழைக்கின்றனர்.
திரயோதசிதிதி
திரயோதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதின்மூன்றாவது திதி திரயோதசி ஆகும். திரயோதச எனும் வடமொழி சொல் பன்னிரண்டு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பன்னிரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.
30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறை காலத்தின் பதின்மூன்றாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் பதின்மூன்றாம் நாளுமாக இரண்டு முறை திரயோதசி திதி வரும்.
அமாவாசையை அடுத்துவரும் திரயோதசியைச் சுக்கில பட்ச திரயோதசி என்றும், பூரணையை அடுத்த திரயோதசியைக் கிருட்ண பட்ச திரயோதசி என்றும் அழைக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்