என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெக்ஸாஸ்"
- இந்த வெடிகுண்டுகள் அழுத்தத்தினால் வெடிக்கக்கூடியவை.
- வெடி விபத்து நடப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு அவர் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கழிவறை இருக்கைகளுக்கு அடியில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷ் டப் கார் வாஷிங் நிறுவனத்தின் கிளை நிலையங்களில் உள்ள கழிவறைகளில் சமீபமாக அடுத்தடுத்து சிறிய அளவிலான வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே, நிலையங்களில் உள்ள கழிவறை இருக்கைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டுகள் அழுத்தத்தினால் வெடிக்கக்கூடியவை.அதாவது, யாரேனும் கழிவறை இருக்கைகளில் அமர்ந்து வெடிகுண்டுக்குத் தேவையான அளவு ஏற்படும் பட்சத்தில் அவை வெடிக்கும். இவை சிறிய அளவிலான சேதத்தையே ஏற்படுத்துவன. இதுபோன்ற வெடிவிபத்துகள் கடந்த ஜூலை 19, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடந்துள்ளது. சமீபத்திய வெடி விபத்தில் பெண் கஸ்டமர் ஒருவர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் நபர் ஒருவர் சந்தேகத்துக்கிட்டமான வகையில் அனைத்து கிளைகளுக்கும் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் வாஷ் டப் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கிய போலீஸ், அல்டென் என்ற நபரை கைது செய்தது. அல்டென் அந்நிறுவனத்தின் வாடிக்கை கஸ்டமர் என்றும், வெடி விபத்து நடப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு அவர் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
- பாம்பை பிடுங்குவதற்காக பெக்கியின் கையை கழுகு கடுமையாக தாக்கியது
- இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார்
வெட்ட வெளியில் நடந்து செல்லும் போது வானிலிருந்து காகிதங்கள், கற்கள் மற்றும் இலைகள் போன்றவை ஒருவர் மேல் விழுவது சகஜம். ஒரு சிலரை மின்னல் தாக்கியதை கேள்விபட்டிருக்கிறோம்.
ஆனால் அபூர்வமான தாக்குதலுக்கு உள்ளானார் அமெரிக்காவில் ஒரு பெண்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் ஹார்டிண் கவுன்டியிலுள்ள நகரம் ஸில்ஸ்பி. தன் கணவருடன் இங்கு வசித்து வருபவர் பெக்கி ஜோன்ஸ் (64). இவரும் இவர் கணவரும் தங்களுக்கு சொந்தமான பட்டறையில் சில வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது பெக்கி திறந்த வெளியில் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது பெக்கியின் மீது வானத்திலிருந்து திடீரென ஏதோ விழுந்தது. என்னவென்று பார்த்த போதுதான் அது ஒரு பாம்பு என அவர் உணர்ந்தார்.
உடனே பயத்தில், "கடவுளே காப்பாற்று" என அலறியவாறே அவர் அதனை உதறி தள்ள முயற்சித்தார். ஆனால் பாம்பு பெக்கியின் வலது கையை சுற்றி கொண்டு அழுத்தியது. பெக்கி கத்திக் கொண்டே கைகளை காற்றில் உயர தூக்கி உதறிக் கொண்டேயிருந்தார்.
ஆனால் பாம்பு அவரை விட்டு விலகாமல் அவர் முகத்தை தாக்கியது. அவர் அணிந்திருந்த கண்ணாடியையும் தாக்கியது.
சிறிது நேரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு பழுப்பு-வெள்ளை நிற கழுகு, பெக்கியின் கையை தாக்கியது.
இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானார் பெக்கி. அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார்.
தான் கவ்விக் கொண்டு போன பாம்பை தவற விட்டதால் அந்த பாம்பு பெக்கி மேல் விழுந்திருக்கிறது.
பெக்கியின் கையிலிருந்த தனது உணவான அந்த பாம்பை பிடுங்குவதற்காக கழுகு அவர் கையை, தனது கால் நகங்களால் பிராண்டி, குத்தி காயங்களை ஏற்படுத்தியது.
ஒரு வழியாக அந்த கழுகு கடைசியில் அவர் கையிலிருந்து அதன் இரையை மீட்டு கொண்டு பறந்தது.
உடனடியாக அவர் கணவர், பெக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கழுகின் கால் நகங்களாலும் அலகாலும் ஏற்பட்ட காயங்களுக்கு பெக்கி அங்கு சிகிச்சை பெற்றார். பாம்பு தாக்கியதால் அவர் அணிந்திருந்த கண்ணாடி மிகவும் சேதமடைந்திருந்தது.
இச்சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:
"இது மிகவும் மோசமான தாக்குதல். நான் இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். இச்சம்பவம் நடந்ததிலிருந்து எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. பாம்பை கழுகு கவ்வி கொண்டு செல்வதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் இச்சம்பவம் எனக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் ஒரு புதிய அனுபவம் ஆகும்."
இவ்வாறு பெக்கி தெரிவித்தார்.
பாம்பு, கழுகு என இரு வகை உயிரினங்களால் ஒரே நேரத்தில் பெக்கி தாக்கப்பட்டதும் அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் குறித்து பலரும் வியந்து வருகின்றனர்.
- உண்ணி கடித்ததால் மைக்கேலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன
- உடலில் பல இடங்களில் ரத்த ஓட்டம் நின்றது
அமெரிக்காவில், 35 வயதான மைக்கேல் கோல்ஹோஃப் என்பவருக்கு ஆபத்தான வகையை சேர்ந்த 'உண்ணி' ஒன்று கடித்ததால், ஒரு பயங்கர நோய் ஏற்பட்டு அவரது 2 கைகளும், 2 கால்களின் சில பகுதிகளும் துண்டிக்கப்பட்டது.
டெக்சாஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம், ஒரு உண்ணி கடித்ததால் மைக்கேலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன. அறிகுறிகள் தோன்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு, மைக்கேலின் நிலை வேகமாக மோசமடைந்தது. படுக்கையில் இருந்து எழுந்திருக்க கூட முடியவில்லை. இதையடுத்து அவர், சான் அன்டோனியோ பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போதே அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் நோய்க்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
மைக்கேலுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு, டயாலிசிஸ் தொடங்கப்பட்டது.
எனினும் அவருக்கு உடலில் பல இடங்களில் ரத்த ஓட்டம் நின்றது. இதனால் அவருக்கு கேங்க்ரீன் எனப்படும் திசுக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மைக்கேலின் கால் விரல்கள், அவரது கால்களில் ஒரு அங்குலம் மற்றும் கைகளில் முழங்கை வரை துண்டிக்கப்பட்டது.
தொற்று பாதித்த உண்ணிகளில் உள்ள டைபஸ் எனும் பாக்டீரியா மூலமாக இந்த கொடிய நோய் பரவுகிறது. உலகளவில் 2,500 க்கும் மேற்பட்ட உண்ணி இனங்கள் உள்ளன. அமெரிக்காவில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உண்ணிகள் மட்டுமே கடித்தால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்