search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி குழு ஆய்வு"

    • 10 மைதானங்களில் 48 போட் டிகள் நடக்கிறது.
    • சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம் ஆகியவற்றை ஆய்வு செய்தது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.

    இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, புனே, லக்னோ, புனே ஆகிய 10 மைதானங்களில் 48 போட் டிகள் நடக்கிறது. கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) குழு ஆய்வு செய்து வருகிறது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம் ஆகியவற்றை ஆய்வு செய்தது. மைதானங்களை பார்த்து ஐ.சி.சி. குழு திருப்தி தெரிவித்தது. இந்திய அணி மோதும் முதல் ஆட்டம் சென்னையில் நடக்கிறது. அக்டோபர் 8-ந் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. நியூசிலாந்து அணி மோதும் 2 ஆட்டமும், பாகிஸ்தான் விளையாடும் 2 போட்டியும் ஆக மொத்தம் 5 ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் 5 போட்டிகள் நடக்கிறது. இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் நவம்பர் 23-ந்தேதி நடக்கிறது.

    இதேபோல பயிற்சி ஆட்டம் நடைபெறும் திருவனந்தபுரம் ஆடுகளத்தையும் ஆய்வு செய்தது.

    ஐ.சி.சி. குழு தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை ஆய்வு செய்து வருகிறது. தொடக்க ஆட்டம், இறுதிபோட்டி உள்பட 5 போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது.

    ×