search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள"

    • 4, 16,18,20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.
    • பதிவு செய்யப்படாத கிளப்புகளை வீரர்கள் UNATTACHED தடகள வீரர்களாகவே பதிவு செய்யப்படுவார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் கிட்ஸ் கிளப் பள்ளிகளின் நிறுவனர் மோகன் கந்தசாமி நினைவு 5-வது திருப்பூர் மாவட்ட அளவிலான 14, 16,18,20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற 13-ந் தேதி அவினாசி அருகே பழங்கரையில் உள்ள டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது.

    98 வகையான தடகள போட்டிகள் நடைபெற இருக்கிறது. மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநிலதடகள போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்பார்கள். மாநில தடகளப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள், கோவை நேரு விளையாட்டு அரங்கில், நவம்பர் மாதம் 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. தடகள சாதனை விவரங்கள், தேசிய, மாநில சங்க தகவல்கள், செய்திகளை www.tirupurathleticassociation.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் entrytaa@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசிநாள் வருகிற 8-ந் தேதியாகும்.

    திருப்பூர் தடகள சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிளப்கள் மட்டுமே கிளப் பெயரில் தடகள வீரர்களை பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்படாத கிளப்புகளை வீரர்கள் UNATTACHED தடகள வீரர்களாகவே பதிவு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 86677 99305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறந்த தடகள வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் தடகள சங்கம் சார்பாக தேவையான உதவிகள் செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    ×