என் மலர்
நீங்கள் தேடியது "கோயம்பேடு போலீஸ் நிலையம்"
- ஜெபாவிற்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து 5 வகையான உணவு விருந்து வழங்கப்பட்டது.
- போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
போரூர்:
கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருபவர் ஜெபா. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் தனது கணவர் பரிசுத்த இமானுவேல் என்பவருடன் செங்குன்றத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்த உடன் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் விமரிசையாக நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது ஜெபாவிற்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து 5 வகையான உணவு விருந்து வழங்கப்பட்டது.
இதில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள், ஜெபாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.