என் மலர்
நீங்கள் தேடியது "கிராமக் குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை"
- சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
- கிராம ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அறிந்து கொள்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.இதில் அஸ்வத் தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரம்யா, ஆகியோர் கிராம ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அறிந்து கொள்வது எப்படி? என்பது குறித்து கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.