என் மலர்
நீங்கள் தேடியது "2-ம் நாளாக குளிக்கத்தடை"
- தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அருவியில் குளிக்க 2-வது நாளாக தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழக - கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.
இது தவிர ஆண்டு முழு வதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அருவி பகுதியிலேயே யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அருவியில் குளிக்க 2-வது நாளாக தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இன்று ஆடி 18 என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வனத்துறை தடையால் அவர்கள் ஏமாற்றம் அைடந்தனர். இருந்தபோதும் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஆற்றில் தாலிக்கயிறு சென்றனர்.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 121.50 அடியாக உள்ளது. 293 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.77 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.96 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.மழை எங்கும் இல்லை.