search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெத்தனம்"

    • பணிப்பெண் பாரதி, சாமர்த்தியமாக வேறு ஒரு பாரதி எனும் பெண்மணியின் விலாசத்தை சமர்ப்பித்துள்ளார்
    • பாரதி அம்மா நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் வக்கீல் அலுவலகம் என் அலைக்கழிக்கப்பட்டார்

    கேரளாவில் 1998ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள், காவல்துறையினரின் மெத்தனத்தையும், அலட்சியத்தையும் பறைசாற்றும் விதமாக உள்ளது.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் கள்ளிக்காடு பகுதியில், ராஜகோபால் என்பவரின் வீட்டில் பாரதி எனும் பெண், பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.

    பணிப்பெண் பாரதி ஏதோ காரணத்திற்காக அவர் வேலை செய்த வீட்டில் சச்சரவில் ஈடுபட்டதாக பாலக்காடு தெற்கு பகுதி காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்தது.

    விசாரணைக்கு சென்ற காவல்துறையினரிடம் பணிப்பெண் பாரதி, சாமர்த்தியமாக அவர் பெயரையே கொண்ட வேறு ஒரு பெண்மணியின் வீட்டு விலாசத்தை தனது என பொய்யாக சமர்ப்பித்துள்ளார்.

    அவர் கொடுத்த தகவல்களை முறைப்படி சரி பார்க்காத காவல்துறை, பணிப்பெண் பாரதி கொடுத்த விலாசத்தில் உள்ள பாரதி அம்மா (80) எனும் வேறொரு பெண்மணியை கைது செய்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

    மேலும், தனது வீட்டில் வேலை செய்த பாரதி இவரல்ல என ராஜகோபால் தெரிவித்ததையும் காவல்துறை அலட்சியப்படுத்தி பாரதி அம்மா மீது வழக்கை பதிவு செய்துள்ளது.

    இதனால் இந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் 4 வருடங்களுக்கு முன்பு கைது நடவடிக்கைக்கு ஆளான 'பாரதி' நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் வக்கீல் அலுவலகம் என் அலைக்கழிக்கப்பட்டார்.

    இறுதியாக தற்போது 4 வருடங்கள் கடந்த நிலையில், 'தவறாக கைது செய்யப்பட்ட நபர்' என கூறி, நீதிமன்றம் பாரதியை விடுவித்துள்ளது.

    இத்தனை வருடங்களாக வழக்கை தொடர்ந்த ராஜகோபால், தன் புகாரை திரும்ப பெற்று கொள்வதாக நீதிமன்றத்தில் கூறினார்.

    இதனால் உண்மையான குற்றவாளி பாரதி மீது தற்போது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ×