என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீல்"

    • கவுரி விர்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காரின் பானட் மீது அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
    • போலீசார் வாகனத்தின் பதிவு எண் மூலம் கவுரியை அடையாளம் கண்டு அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சில இளைஞர்களும், இளம்பெண்களும் வித்தியாசமான வீடியோக்களையும், சாகசங்களையும் செய்து ரீல் வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அவற்றில் சில ஆபத்தானவையாக இருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ஹோசியர்புர் மாவட்டத்தை சேர்ந்த கவுரி விர்டி என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமல் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான பாலோயர்களை கொண்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரின் பானட் மீது அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

    சில மணி நேரங்களிலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்று வைரலான இந்த வீடியோ ஜலந்தர்-ஜம்மு சாலையில் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தின் பதிவு எண் மூலம் கவுரியை அடையாளம் கண்டு அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் ரீல் வீடியோவுக்காக இந்த செயலில் ஈடுபட்டதாக கூறினார். அவருக்கு எச்சரிக்கை செய்த போலீசார் இதுதொடர்பான விளக்கத்தையும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    • ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.
    • வீடியோ எடுக்கும்போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து ஆசீப் கீழே விழுந்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 20 வயது இளைஞர் 3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

    3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் ஆசிஃப்பிறகு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிப்பை அவரது நண்பர்கள் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தம் வெளியேறியதினால் ஆசீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ×