என் மலர்
நீங்கள் தேடியது "திவ்யா சத்யராஜ்"
- மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் சத்யராஜ் மகள் ஈடுபட்டுள்ளார்.
- மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் மறுவாழ்வு பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டார். இப்போது மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன. மணிப்பூரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிய நானும் எனது தோழி காவ்யா சத்தியமூர்த்தியும் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.
மணிப்பூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான யா-ஆலின் நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இதன் நிறுவனர் மனித உரிமைப் பாதுகாவலரான சதாம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு, மாற்றத்தின் முன்னணியில் இருந்து வருகிறார்.
அவருடன் இணைந்து தற்போது மணிப்பூரின் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். இந்த பிரசாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
நான் இந்த மாதம் இவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பங்களித்துள்ளேன். வரும் மாதங்களில் மேலும் வழங்க உள்ளேன். மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய நன்கொடையாளர்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கும். இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினரையும் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறி னார்.
- பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம்.
- பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.
சென்னை:
தீபாவளி வந்தாச்சு. இன்று இரவு முதல் நாளை இரவு வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அதே நேரம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது முக்கியம்.
மருத்துவ ரீதியாக என்ன மாதிரி பிரச்சனைகள் வரலாம்? அதில் இருந்து தப்பிக்க கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-
தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். அதே நேரம் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம். இருமல், தும்மல், கண், சருமம் ஆகிய அலர்ஜியை சிலர் சந்திக்கலாம்.
இந்த மாதிரி அலர்ஜி வந்தால் உணவு வகைகளில் தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மீன், இறால், கோழிக்கறி, செயற்கை பொடி வகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கண்ணில் வரும் அலர்ஜியை தவிர்க்க குளிர்ந்த தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அழகு நிலையங்களுக்கு சென்று சரும பராமரிப்பு, மேக்-அப் போடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. அது தவறு. எலுமிச்சையை முகத்தில் தேய்ப்பதால் தோல் உரியும். அரிப்பை ஏற்படுத்தும். இயற்கையான பொருள் தானே என்று கருதக் கூடாது. கிச்சன் பொருட்களை சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அலர்ஜி ஏற்பட்டால் 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு சரியாகி விடும். மருத்துவர்களை அணுகி அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி எடுத்துக் கொள்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் அது உதடு, நாவை வற்ற வைக்கும். பட்டாசு புகைகளில் இருந்து அலர்ஜி எதுவும் அண்டாமல் இருக்க வாய், மூக்கு பகுதிகளை மறைக்கும்படி முக கவசம், கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு கை மற்றும் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் சேர போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன
- இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன. சத்யராஜ் தி.க கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் அவரது மகள் பாஜகவில் சேர போகிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்து சில மாதங்களுக்கு முன்பு ஊடகத்தில் அரசியலில் ஆர்வம் இருக்கிறது என நான் கூறிய பிறகு பலரும் எந்த கட்சியில் சேருவீர்கள்? உங்களுக்காக சத்யராஜ் பிரச்சாரம் செய்வாரா? மேயர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்பீர்களா? என பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.
நான் அரசியலுக்கு வருவது பதவிக்காக அல்ல. மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக. மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறேன். அதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக நாங்கள் அளித்து வருகிறோம்.
அந்த வகையில் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். பாஜகவில் இருந்து வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை.
நான் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை வரும் மக்களவை தேர்தலுக்கு பின் அறிவிப்பேன். புரட்சி தமிழன், தோழர் சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்" என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.
- அவருக்கு செயற்கை குழாய் மூலம் உணவு கொடுத்து வருகிறோம்.
- என் தந்தை சிங்கிள் பெற்றோராக இருக்கிறார்.
சென்னை:
தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் சத்யராஜ். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவரது மகள் திவ்யா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,
என் அம்மா 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு செயற்கை குழாய் மூலம் உணவு கொடுத்து வருகிறோம். இதனால் என் தந்தை சிங்கிள் பெற்றோராக இருக்கிறார். எங்கள் அம்மா கண்டிப்பாக பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- கொரோனா பெருந்தொற்றில் அதிகமான இறப்புகள் பதிவானபோது பால்கனியில் நின்று விளக்குகளை ஏந்தும்படி எங்களிடம் கேட்கப்பட்டது ஏன்?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர்க்குள்ளாக்கியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைதான ஞானசேகரன் என்பவர், திமுகவை சார்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை திமுக மறுத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்துவதாகக் கூறியிருந்தார்.
அதன்படி, கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் அண்ணாமலை ஈடுபட்டார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
மணிப்பூர் பிரச்சனைக்கு ஏன் அமைதியாக இருந்தீர்கள்? கொரோனா பெருந்தொற்றில் அதிகமான இறப்புகள் பதிவானபோது பால்கனியில் நின்று விளக்குகளை ஏந்தும்படி எங்களிடம் கேட்கப்பட்டது ஏன்? கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டபோது, சில தலைவர்கள் ஏன் ரத யாத்திரையை ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள்? தடுப்பூசி கொள்கை ஏன் பேரழிவை ஏற்படுத்தியது? என கேள்வி கேட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
- திவ்யா சமீப காலமாகவே தனது சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
நடிகர் சத்யராஜ் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது மகள் திவ்யா சமீப காலமாகவே தனது சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா தி.மு.க.வில் இணைந்தார்.
- சமூக நீதி கோட்பாட்டில் சமரசமின்றி வெற்றிநடை போட மனமார வாழ்த்துகிறேன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திவ்யா, "ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் அது திமுக, அதற்கு உதாரணம் முதல்வரின் காலை உணவு திட்டம். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் திமுக தான். அதற்கு உதாரணம் புதுமை பெண்கள் திட்டம். எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் ஒரே கட்சி திமுக என்பதால் அக்கட்சியில் இணைந்துள்ளேன்" என்று தெரிவித்த்திருந்தார்.
இந்நிலையில் திமுகவில் இணைந்த மகள் திவ்யாவிற்கு நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
அந்த வீடியோவில், "என் அன்பு மகள் திவ்யா, திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதற்கு என்னுடைய மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழியில் சமூக நீதி கோட்பாட்டில் சமரசமின்றி வெற்றிநடை போட மனமார வாழ்த்துகிறேன்" என்று சத்யராஜ் பேசியுள்ளார்.
- மற்ற கட்சிகளை விட பெரிய மரியாதை தருகிற கட்சி தி.மு.க. தான்.
- எதிர்க்கட்சிகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. மக்கள் பணி தான் முக்கியம்.
சென்னை:
நடிகர் சத்யராஜ் மகளும் பிரபல ஊட்டசத்து நிபுணருமான திவ்யா சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் தி.மு.க. கொடியுடன் சிலர் காரில் சென்ற பெண்களை விரட்டியதாக வீடியோ காட்சிகள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திலும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். அந்த நபர் தி.மு.க.காரர் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பிரபலமானவர்களுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டவர் தவறு செய்தால் பிரபலங்கள் பொறுப்பாக முடியுமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு பெண்ணிற்கு நடந்தது பெரிய கொடுமையான விஷயம். ஆனால் தி.மு.க. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
திமு.க. கட்சி கொடி எங்கும் கிடைக்கிறது. கடைகளில் தி.மு.க. கொடியை வாங்கிக் கொண்டு யாரும் தவறு செய்தால் அதற்கு தி.மு.க. எப்படி பொறுப்பாக முடியும். ஈ.சி.ஆர். சம்பவத்துக்கும் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்க்கட்சிக்காரர் சொல்லும் பொய்களுக்கும், புகார்களுக்கும் நாங்கள் பதில் சொல்ல அவசியம் கிடையாது. எதிர்க்கட்சிகள் இது பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது என்று தான் நான் நினைக்கிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்ற தருணம் கொரோனா உச்சத்தில் இருந்த தருணம். பதவி ஏற்றதும் கொரோனாவுக்கு தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினர்.
பாரத பிரதமர் மோடி கொரோனாவுக்கு எல்லோரும் மாடியிலிருந்து விளக்கு பிடிக்க சொன்னார். விளக்கு பிடிக்க இதுவா நேரம்.
தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றால் கொரோனாவையும், வெள்ளத்தையும் சமாளித்திருக்கவே முடியாது. மற்ற கட்சிகளை விட பெண்களுக்கு பெரிய மரியாதை தருகிற கட்சி தி.மு.க. தான்.
அண்ணாமலை லண்டன் போய் விட்டு வந்து சவுக்கால் அடித்துக் கொண்டார். இதைப் பார்த்து, 'பக்கத்து வீட்டு பையன் சாக்லேட் கொடுக்கவில்லை என்றால் நான் சவுக்கால் அடித்துக் கொள்வேன்' என்கிறான்.
தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். நீங்கள் கண்டிப்பாக செருப்பு அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் காலில் முள் குத்தினால் கூட தி.மு.க. தான் காரணம் என்று சொல்வீர்கள்.
அ.தி.மு.க., பா.ஜ.க. பற்றி நாங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. எதிர்க்கட்சிகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. மக்கள் பணிதான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
- சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
சென்னை:
நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைவதற்கு முன்பாகவே மத்திய அரசை சாடி சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த திவ்யாவை, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக நியமித்து தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.