search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக்சபா"

    • மக்களவையில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை.
    • பாராளுமன்றத்தில் இதுவரை 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் 13ம் தேதி அன்று மக்களவையில் இரண்டு பேர், கலர் புகை குண்டு வீசினர். இதுதொடர்பாக, பாதுகாப்பு மீறல் குறித்து அமித்ஷாவிடம் இருந்து அறிக்கை கோரி எதிர்க்கட்சிகள் சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து வருகின்றனர்.

    இதையடுத்து, சபாநாயகர் எடுத்த நடவடிக்கையால் கடந்த டிசம்பர் 14ம் தேதி முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சபை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சபையில் இருந்து எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அப்போது, மக்களவையில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், தீபக் பைஜ் மற்றும் நகுல்நாத் ஆகியோருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பினர். கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் போராட்டம் நடத்திய உறுப்பினர்களை எச்சரித்து, மூன்று காங்கிரஸ் எம்.பி.க்களின் பெயரையும் கூறினார்.

    அப்போது, "நான் எந்த ஒரு எம்.பி.யையும் காரணமின்றி சஸ்பெண்ட் செய்யவில்லை. நீங்கள் சபையில் காகிதங்களை கிழித்து வீசுகிறீர்கள். எம்.பி.க்கள் என்னிடம் வந்து சஸ்பெண்ட் செய்யச் சொல்கிறார்கள். நான் யாரையும் சஸ்பெண்ட் செய்ய விரும்பவில்லை, ஆனால் நீங்கள் சபையில் பிளக்ஸ் பேனர்களை கொண்டு வருகிறீர்கள். இது சரியல்ல" என்றார்.

    இறுதியில், மக்களவையில் இருந்து டி.கே.சுரேஷ், நகுல்நாத், தீபக் பைஜ் உள்ளிட்ட 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் இதுவரை 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும்.
    • வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை.

    மக்களவையில் இன்று மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

    அவர் பேசுகையில், " மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்.

    மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பு மக்களிடையே பேசியுள்ளேன். மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் உண்மையிலேயே எதிர்க்கட்சிகளை விட, எங்களுக்குத்தான் வலி அதிகம். எனினும், அந்த சம்பவம் அவமானமானது என்றால், எதிர்க்கட்சிகள் அதனை அரசியாக்குவது மேலும் அவமானமானது

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிக வன்முறைகள் நடைபெற்றுள்ளன. வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை.

    மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவதற்கு முதல் நாளில் இருந்தே தயாராக இருந்தோம். மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் கூடி எழுதியுள்ளேன்.

    ஒரு முதலமைச்சர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் மாற்றலாம். மணிப்பூர் முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் முழுவதும் ஒத்துழைக்கிறார்" என்றார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மக்களின் அன்பை பெற்ற பிரதமராக மோடி உள்ளார்.
    • அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் காங்கிரஸின் உண்மையான நோக்கம்.

    ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை.

    மக்கள் அரசின் மீது அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளனர்.

    அறதிப் பெரும்பான்மையுடன் பாஜக அரசு 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த 9 ஆண்டுகளில் 50 வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

    இதே நாளில்தான் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவங்கினார்.

    மக்களின் அன்பை பெற்ற பிரதமராக மோடி உள்ளார்.

    ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பிரதமர் மோடி ஓய்விவன்றி உழைக்கிறார்.

    மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசுக்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை அம்பலத்படுத்தும்.

    அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் காங்கிரஸின் உண்மையான நோக்கம்.

    வெற்றி முழக்கங்களை முன்வைத்து ஏழைகளின் வாக்குகளை பெற்ற காங்கிரஸ்.

    பிரதமர் மோடி ஏறத்தாழ 9 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளார்.

    2 டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து கொரோனா வைரஸில் இருந்து 130 கோடி இந்தியர்களை மோடி அரசு காப்பாற்றியது.

    பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பாடுபட்டு வருகிறார்.

    11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை பிரதமர் நேரடியாக வழங்கியுள்ளார்.

    விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக அவர்கள் கடனே வாங்க வேண்டியதில்லை என்ற நிலையை கொண்டு வர எங்கள் அரசு செயல்படுகிறது.

    அரசியல் உள்நோக்கத்துடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு நாம் கொடுப்பது இலவசம் அல்ல.

    விவசாயிகளிடம் காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இலவச திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது எங்களின் நோக்கம் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் மாநில மக்களின் குரசை நசுக்கிவிட்டீர்கள்.
    • நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. தேச துரோகிகள்.

    மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது, மணிப்பூர் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்தார்.

    இந்நிலையில், மணிப்பூர் சம்பவம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

    ஆளுங்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:-

    மணிப்பூர் மாநில மக்களின் குரலை நசுக்கிவிட்டீர்கள்.

    மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரத தாயை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்.

    நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. தேச துரோகிகள்.

    இந்திய ராணுவத்தால் மணிப்பூர் கலவரத்தை ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் அதை செய்யவில்லை.

    நாட்டு மக்களின் குரலை கேட்காமல் யாரின் குரலை பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார் ?

    ராவணன் மேகலா, கும்பகர்ணன் ஆகிய இரண்டு பேரின் பேச்சை மட்டுமே கேட்டார். ராவணனை போல் பிரதமர் மோடியும் அமித்ஷா, அதானி ஆகிய இரண்டு பேரின் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இலங்கையை எரித்தது அனுமான் இல்லை. ராவணனின் ஆணவம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை.
    • மணிப்பூரை இன்று நீங்கள் இரண்டாக பிரித்துவிட்டீர்கள்.

    மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி தனது உரையை தொடங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவையில் மீண்டும் என்னை நியமித்ததிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    முன்பு, பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியை மையமாக வைத்து பேசினேன்.

    அதானி குறித்து நான் தெரிவித்த கருத்து சில மூத்த உறுப்பினர்களுக்கு கஷ்டமாக இருந்தது. இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றேன். எனது யாத்திரை இன்னும் முடியவில்லை.

    கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியபோது நாட்டையும், மக்களவையும் பார்க்க விரும்பினேன்.

    யாத்திரையின் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.

    யாத்திரையின்போது நிறைய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.

    யாத்திரை செல்ல செல்ல சாமானிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    பயிர் காப்பீடு குறித்து விவசாயி பகிர்ந்த வலி என்னையும் தொற்றிக் கொண்டது.

    நாட்டு மக்களின் வலியை உணர வேண்டும். மக்களின் துக்கமே எனது துக்கம். அவர்களின் வலியே எனது வலி.

    மணிப்பூரை இன்று நீங்கள் இரண்டாக பிரித்துவிட்டீர்கள். சில நாட்களுக்கு முன்பாக நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை. மணிப்பூரில் பிரதமர் செய்யாததை தான் செய்தேன்.

    மணிப்பூரில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினேன். தனது கண் முன்னே தனது ஒரே மகனை சுட்டுக் கொன்றுவிட்டதாக மணிப்பூர் பெண் ஒருவர் சொன்னார்.

    மகனை இழந்த பெண் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறியதாக கூறினார். ஒரு புகைப்படத்தை காட்டி இதுவே என்னிடம் இருக்கும் மிச்சம் என அந்த பெண் சொன்னார்.

    மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை.

    இந்திய தேசத்தை மணிப்பூர் சம்பவத்தின் மூலம் கொன்றுவிட்டது. பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டுமல்ல நாட்டையே மணிப்பூரில் கொன்றுவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.
    • இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    மக்களவையில் மீண்டும் என்னை நியமித்ததிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    முன்பு, பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியை மையமாக வைத்து பேசினேன்.

    அதானி குறித்து நான் தெரிவித்த கருத்து சில மூத்த உறுப்பினர்களுக்கு கஷ்டமாக இருந்தது. இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றேன். எனது யாத்திரை இன்னும் முடியவில்லை.

    கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியபோது நாட்டையும், மக்களவையும் பார்க்க விரும்பினேன்.

    யாத்திரையின் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.

    யாத்திரையின்போது நிறைய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.

    யாத்திரை செல்ல செல்ல சாமானிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    பயிர் காப்பீடு குறித்து விவசாயி பகிர்ந்த வலி என்னையும் தொற்றிக் கொண்டது.

    நாட்டு மக்களின் வலியை உணர வேண்டும். மக்களின் துக்கமே எனது துக்கம். அவர்களின் வலியே எனது வலி.

    ×