என் மலர்
நீங்கள் தேடியது "வைத்தீஸ்வரன் கோவில்"
- திருச்சாந்துருண்டை பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும்.
- வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரசித்தி பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக்குமார சுவாமி, தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் 'திருச்சாந்துருண்டை' எனும் பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நகரத்தார் மக்களின் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அதாவது, பண்டைய காலத்தில் பூம்புகார் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடியேறிய நகரத்தார் மக்கள் பல தலைமுறைகளாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து தங்கள் குலதெய்வமான தையல் நாயகியை வழிபடுவது வழக்கம்.
இதற்காக அவர்கள் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமை தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர். பின்னர், பாதயாத்திரை தொடங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவிலின் கொடிமரம் முன்பு செலுத்துகின்றனர்.
பின்னர், அம்பாள் மற்றும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு தங்களது புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வது வழக்கம்.
அதன்படி, இன்று சித்திரை மாத 2-வது செவ்வாய்க் கிழமையை யொட்டி காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பரமக்குடி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் புயல் பாலசந்திரன், செல்வி, ராஜா, விசித்திரா மேரி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 4 வீதிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வருவதற்காக சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.
- திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
- வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு சிறப்பு.
வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளி உள்ள செல்வ முத்துக்குமரனை வணங்கினால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும். இத்தலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமரனை வழிபாடு செய்வது மூலம் செவ்வாய் தோஷம் பரிகாரம் நிவர்த்தி அடையும். திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
முருகப்பெருமானின் ஆறுமுகங்களும், 12 கைகள் செய்யும் தொழில்களும்:
ஆறுமுகங்கள்:
1. உலகிற்கு ஒளி தருவது ஒருமுகம்,
2. வேள்வி காப்பது ஒரு முகம்,
3. அடியார் குறை நீக்கி வரமருளுவது ஒரு முகம்,
4. வேத ஆகமாய் பொருளை விளக்குவது ஒரு முகம்,
5. பகைவரை தீயோரை அழித்து நன்மை செய்வது ஒருமுகம்,
6.வள்ளிக்கு மகிழ்வை தருவது ஒருமுகம்.
12 கைகள்:
1,2 கைகள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. 3- வது கை அங்குசம் செலுத்துகிறது. 4- வது கை தொடையில் அமர்த்தி உள்ளது. 5,6-வது கைகள் வேலை சுழற்றுகின்றன.7-வது கை முனிவர்களுக்கு பொருளை விளக்குகிறது.
8- வது கை மார்பில் உள்ள மலையோடு சேர்ந்துள்ளது. 9- வது கை வேள்வி ஏற்கிறது.10- வது கை மணியை ஒலிக்கின்றன. 11- வது கை மழையை அளிக்கின்றன. 12- வது கை மணமாலை சூட்டுகிறது.
முருகப்பெருமானின் கிரீடத்தில் உள்ள உறுப்புக்கள்:
கிம்புரி, கோடகம், பதுமம், மகுடம், தாமம்.
ஆறுபடை வீடுகள்:
1.திருப்பரங்குன்றம் (மதுரைக்குஅருகில்), 2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), 3. திருவாவினன்குடி (பழனி), 4. திருஏரகம் (சுவாமிமலை), 5. குன்றுதோறாடல் (திருத்தணிகை), 6. பழமுதிர்ச்சோலை (மதுரைக்கு அருகில்).
வல்லவரான இறைவன் உயிர்களின் மீது கொண்ட கருணை யினால் உயிர்களின் ஆணவமாகிய சூரனின் ஸ்தூல உடம்பை போக்கி (ஆணவ மலம் நீங்கின அச்சூரனின்) ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் என்பது சூரசம்காரத்தின் உட்கருத்தாகும்.
வழிபடும் முக்கிய நாட்கள்:
சஷ்டி திதி, விசாகம், கிருத்திகை நட்சத்திரங்கள், செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை ஆகியவை. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு சிறப்பாக உரியது. இவ்விரதத்தால் நினைத்த பயன் கைகூடும்.
கிருத்திகை விரதம்:
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று செல்வ முத்துக்குமரனுக்கு சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
- வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
- செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பு.
வைத்தீஸ்வரன் கோவிலில், செவ்வாய் பகவானைத் தை மாத செவ்வாய்களிலும், குறிப்பாக தை மாத கடைசி செவ்வாயில், செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பாகும். மேலும் செவ்வாய் பகவான் உச்சம் பெறும் தை மாதம், ஆட்சி பெறும் சித்திரை, கார்த்திகை மாதங்களில், செவ்வாயின் நட்சத்திரகளாகிய மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் வரும் செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம்.
செவ்வாய் ஓரையில் செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை வழிபட்டு பரிகாரம் செய்வது மிக மிகச்சிறப்பாகும்.
ஹோம பலன்
உத்திராடம், உத்திரட்டாதி, உத்திரம்-இந்த நட்சத்திரங் களில் ஸ்ரீமகாலட்சுமியை ஆவாகானம் செய்து ஆயிரம் நந்தியாவட்டை மலர்களால் ஹோமம் செய்து ஐஸ்வர்யம் நிலையாய் இருக்கும் பெளர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.
பஞ்சமி திதியிலும், வெள்ளிக்கிழமையிலும் வாசனை புஷ்பத்தால் ஹோமம் செய்ய ஒரு வருடத்திற்குள் அனைத்து சம்பத்துக்களையும் அடைந்து செல்வந்தனாவான்.
விஷ்ணு பரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி
பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா? அதில் இருப்பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி, வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி, பச்சை நிற முடைய பரீதி தேவி, சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி, மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி, பச்சை நிறமுடைய புஷ்டி தேவி, என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.
இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும், கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.
வடபழனி
சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.
செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீதுர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.
செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் ஏற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு. பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பை தரும்.
- செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலம் வைத்தீஸ்வரர் கோயில்.
- மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது.
செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த எந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.
இந்தியாவில் கிரக, விஞ்ஞானப் பூர்வமான ஆகர்ஷண சக்திகள் வாய்ந்த பல ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் விந்திய மலை. இம்மலைத் தொடருக்கு தெற்கில் உள்ள பூமி, அங்கார பூமி என்றும், இங்கு செவ்வாயின் தோஷம் அதிக அளவில் ஏற்படாது என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளன. இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் சக்தி வாய்ந்த எந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.
சீதையை தேடிக்கொண்டு, தம்பி லட்சுமணனுடன் வனவாசம் வந்த ஸ்ரீ ராமபிரான், சீதா தேவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போரிட்டு, உயிர் துறந்த ஜடாயுவுக்கு, திருப்புட்குழி என்ற புண்ணிய தலத்தில் அந்திம தகனக் கிரியைகளைத் தன் தொடை மேலேயே செய்துவிட்டு, அதற்குப்பின் செய்ய வேண்டிய தினச்சடங்குகளை வைத்தீஸ்வரன் கோவிலில் செய்ததால், மேலும் இத்திருத்தலம் புனிதம் பெற்று, புள்ளிருக்கும் வேளூர் என சிறப்பு பெயருடன் திகழலாயிற்று.
மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த தலத்திற்கு மேலும் அதிகமாயிற்று. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லது அவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும். செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.
வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய் தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.
ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி. மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார். வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.
கோவில் வரலாறு:
செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய்'' வந்ததாகவும் அதனை போக்க சிவபெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.
ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கிக் கொண்டு போகும் போது, ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயுவின் உடல் கீழ் விழுந்தது. அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் லட்சுமணன் உடலைக் கண்டு அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர்.

இந்த சிதை இக்குளத்திற்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குளம் `சடாயு குளம்' என்று அழைக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது அந்த அமிர்தம் சிதறி குளத்தில் விழுந்தது. ஆதலால் இத்திருக்குளம் "சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்'' என்ற பெயர் பெற்றது.

கோவிலின் சிறப்பம்சம்:
இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது. இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அனைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார். மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.
சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சிவனை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு.
- மாணவர்கள் 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.
- மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணையை பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டு வாழ்த்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு அப்துல் கலாமை நினைவு கூரும் விதமாக வைத்தீஸ்வரன் கோவில் முத்துராஜம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 210 மாணவ-மாணவிகள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே ஏ4 பேப்பரில் வரைந்து, வண்ணமிட்டு அவற்றை இணைத்து 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.

83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.
இதனை பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள் கீர்த்திமதி மனோஜ் நிர்மல், மதன், வரலட்சுமி தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் வரைந்து உருவாக்கிய 83 அடி நீளம் கொண்ட அப்துல் கலாம் ஏவுகணையை பார்வையிட்டு, வாழ்த்தினர். இதில் பள்ளி முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.