search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்று மதில்"

    • உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.
    • சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திறந்த வெளி கிணறுகள், பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் மற்றும் காலாவதியான குவாரிகள் அமைந்துள்ள இடங்களின் உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மேற்படி ஆபத்து விளைவிக்கும் நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.

    திறந்தவெளி கிணறுகளை சுற்றிலும் உயரம் அதிகமுள்ள தடுப்புச் சுவரினை அமைத்தும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை கடினமான இரும்பு மூடிகள் அமைத்தும், குவாரி பள்ளங்கள் மற்றும் திறந்தவெளி பள்ளங்களை பொருத்த மட்டில் கம்பி வேலி அமைப்புகளை ஏற்படுத்தியும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்

    அனைத்து அரசு துறை மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட மேற்படி அமைப்புகள் குறித்த பட்டியலினை ஒரு வார காலத்திற்குள் எடுத்து, அவற்றின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்த அறிக்கையினை 10 தினங்களுக்குள் சமர்பித்திட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள் மற்றும் பள்ளங்களை பொறுத்தமட்டில் தொடர்புடைய அரசு துறையினர் 10 தினங்களுக்குள் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்தல் தேவையான இடங்களில் புதியதாக ஏற்படுத்துதல் மற்றும் சாலைகளின் எல்லைகளில் இரும்பு பாதுகாப்பு தகடுகள் அமைத்தல், இரவு நேரங்களில் ஒளிரும் அமைப்புகளை ஏற்படுத்துதல், சாலைகளில் தேவையான இடங்களில் கூடுதல் வெள்ளை மற்றும் மஞ்சன் நிற கோடுகள் அமைத்து அதன் அறிக்கையினை 28-ந்தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். நில உடைமையாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறினால் அவர்களுக்கு எதிராக பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கருதி சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×