என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துர்க்கை அம்மன்"
- வைர கிரீடம், வைர பொட்டு வைத்து அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டன.
- பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
ஆந்திர மாநிலம், இந்திர கிளாத்திரியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
மும்பையை சேர்ந்த சவுரப் என்பவர் ரூ.2.50 கோடி மதிப்பில் வைரத்திலான கிரீடத்தையும், ஐதராபாத் கொண்டாபூரை சேர்ந்த சூரியகுமார் என்பவர் வைரத்திலான பொட்டும், ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வைரம் பொறிக்கப்பட்ட சூரியனையும் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினர்.
வைர கிரீடம், வைர பொட்டு மற்றும் வைரம் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டன. ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
- ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
- ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி
ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி
ஓம் இமய வல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி
ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி
ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி
ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே! போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி
ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறவு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தவளே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி
ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி
ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி
ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே! போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் கொற்றவையே! போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே! போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி
ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி
ஓம் சக்தி வடிவே! போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே! போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி
ஓம் சிறுநகை புரிபவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபீட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் செங்கதிர் ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே! போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி
ஓம் தண்கதிர் முகத்தவனே போற்றி
ஓம் தாயே! நீயே! போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ்கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்கையே! அம்மையே! போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி
ஓம் நாராயணீயே! போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் நீதியினைக் காப்பாய் போற்றி
ஓம் பகவதியே! போற்றி
ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா! போற்றி
ஓம் பொன் ஒளி முகத்தவளே போற்றி
ஓம் போர் மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் மாதங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி
ஓம் மகமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே! போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய்! போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே! போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய்! போற்றி
ஓம் துர்க்கா தேவியே! போற்றி
- பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.
- வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.
ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும்.
குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்த கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.
பிள்ளை பேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள்.
இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.
பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.
குழந்தை செல்வம் கிடைக்கும்.
வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.
ஆண்கள் துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.
வியாபாரம் விருத்தியாகும்.
செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும்.
இளம் பெண்கள் துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய் கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.
நல்ல கணவன் அமைவான்.
வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.
அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும்.
பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்.
இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.
- ஞாயிற்றுக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்வதால் வறுமை நீங்கும்.
- வெள்ளிக் கிழமைகளில் தேங்காய் சாதம் நைவேத்யம் செய்தால் மாங்கல்ய பலன் பெருகும்.
ராகு கேது பெயர்ச்சியான ஜாதக ரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது.
ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விவரம் தரப்பட்டுள்ளது.
ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6.00 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும்.
சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள்
திங்கள்கிழமைகளில் காலை 7.30-9.00 க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.
இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய்
ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும்.
இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன்
மதியம் 12.00 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும்.
இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதும், ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன்
வியாழக் கிழமைகளில் மதியம் 1.30-3.00 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும்.
இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி
வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12.00 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம்.
எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும்.
இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி
சனிக்கிழமைகளில் காலை 9.00-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.
இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.
- குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர்.
- அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர்.
உருவத்தை காட்டி சிலை செய்ய சொன்ன முத்தாரம்மன்
குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர்.
அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள். "எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிறிய ஊர் உள்ளது. அங்கு செல். அனைத்தும் நிறைவேறும்" என்று கூறினாள்.
மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர். இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார்.
அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள். அதுமட்டுமல்லாமல், தன் உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள்.
பின்னர், தனது மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள்.
தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள் சுயம்புவாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்தக் கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்தக் கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி. கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார்.
முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர், அவ்வூரை சேர்ந்த சிலருடன் மைலாடி சென்றார். சுப்பையா ஆசாரி யார் என்று விசாரித்து அறிந்து அவரை சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர். முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள்.
முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்திஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இதுபோல் அம்பாளும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.
இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது.
மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும். இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது
- மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான்.
- சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.
புராண கதைகளும், பெயர்காரணமும்
குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.
"பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன?" மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.
முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது.
முத்தாரம்மன் பீட சிறப்பு
முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஒரு செட்டியார் தன் மனைவியுடன் குலசேகர பட்டின கடற்கரையில் சென்றபோது கடல் அலையால் அவருடைய சரக்குகள் கடலில் மூழ்கியது. வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள். சிவனும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். "ஆண்டவனே எங்களுக்கு காட்சி தந்ததே நாங்கள் செய்த பாக்யம், நீங்கள் (சிவனும் பார்வதியும்) இருவரும், திருமண கோலத்தில் இதே போல் பக்தர்களுக்கு காட்சி தர வேண்டுகிறேன் என்று வேண்டினார். இறைவனும் "அவ்வாறே ஆகட்டும்" என்று கோயில் பீடத்தில் காட்சி தருகிறார்.
குலசையில் 8 அம்மன்கள்
உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான். சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள். இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள். அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழயாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்ச கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும் போது காளியம்மனாக உருவெடுத்தாள்.
இங்கு கருங்காளி, பத்ரகாளி, சந்தியம்மன், அங்காளம்மன், தட்டத்தி அம்மன், பரமேஸ்வரி, வீராகாளி, அறம் வளர்த்த நாயகி அம்மன் 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும். இதில் வீராகாளியம்மனுக்கு மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது. இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை கான மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.
வேடம் சொல்லும் அம்மன்
குலசை கோவிலில் தசரா பண்டிகையையட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர். காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன்,விநாயகன் என பல்வேறு கடவுளைப் போல பக்தர்கள் வேடம் புனைந்து வருவது வேறு எங்குமே இல்லாத சிறப்பு.
இப்படி வேடம் புனையும் பக்தர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள். அதே வேடத்தில் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதை கோவிலில் செலுத்துகிறார்கள்.
பல்வேறு அவதாரங்கள் புனைந்து அம்மை, அப்பனைத் தரிசிக்கவும் வேண்டுதலைக் காணிக்கையாக்கவும், ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும். தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.
ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டி கொள்வார்கள். அவர்கள் அணியும் வேடத்தை அவர்களே தீர்மானிப்பதில்லை. அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது.
முத்தாரம்மன் சந்நிதியில் முத்து போட்டுப் பார்க்கும் பூசாரிகள், ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள். அதன்படியே பக்தர்கள் வேடமணிந்து பத்து நாள் திருவிழாவில் பங்கு பெறுவர். பத்து நாள் வழிபாடு முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.
ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்