என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈபிள் டவர்"

    • ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது ஈபிள் டவர். உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர் உள்ளது.

    இந்நிலையில், ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக இன்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டது.

    வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடத்தப்பட்ட பிறகு, அந்த மிரட்டல் போலியானது என தெரிய வந்தது. 2 மணி நேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    • இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது.
    • பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்கத்தொடங்கின.

    பாரிஸ்:

    யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம்.

    இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

    இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

    • உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரசித்தி பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கஸ்டவ் ஈபிள் என்பவர் கட்டமைத்ததால் அவரது பெயரிலேயே இந்தக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகிறது.

    கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், ஈபிள் டவரில் உள்ள லிப்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திற்கும், இரண்டாவது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

    தீவிபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

    ஈபிள் டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×