search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து தடுப்பு நடவடிக்கை"

    • உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் கூறினார்.
    • விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லா மல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழி கள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்பு களும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான கிணறுகள் அச்சுறுத்தலாக உள்ளன.

    ஆழ்துளை கிணறு விபத்துக்களை தடுப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறி முறைகளை 2010-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வகுத்தளித்தி ருக்கிறது. அந்த வழிகாட்டி நெறி முறைகள் அனைத்தை யும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பசுமை நிதி மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

    திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோர கட்டுமான பள்ளங்கள், சாலையோர கால்வாய்கள், கைவிடப் பட்ட குவாரி கிடங்குகள் ஆகியவற்றில் விபத்து ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தலைமை செயலரும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த ஆலோசனையின் படி அனைத்து கிராமங்க ளிலும் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோரங்க ளில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள், ஆழமான கால்வாய்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அவற்றில் அந்தந்த துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×