search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெப் பெசோஸ்"

    • வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
    • நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள்.

    ஏதன் ஈவென்ஸ் [Ethan Evans] தனது மண வாழ்வுக்கு வேலையிடத்தால் வந்த வினையை குறித்து மனம் திறந்துள்ளார். லிங்க்கிட்- இன் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் தொடக்கத்தில் வேலை செய்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ, வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

    எனது மனைவியும் நானும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது. நான் எனது வேலையையும் விட்டுவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். அந்த சிஇஓவின் செயல்கள் குறித்து நான் முன்னரே அறிந்திருந்தாலும் எனது பொருளாதார சூழல் காரணமாகவும், அவர் எப்படியும் அவரது முயற்சிகளில் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கையிலும், அங்கு தொடர்ந்து வேலை செய்து பெரிய தவறு செய்துவிட்டேன். அந்த தவறுக்கு நான் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

     

    நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள். இதுபோன்ற [ஸ்டார்ட் அப் சிஇஓ] பாம்புகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்றால் அவர்கள் பின்புலம் குறிக்கும், அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது குறித்து முன்னரே அறிந்துகொள்ளுங்கள் என்று கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து ஊழியர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். ஏதன் அமேசான் சிஇஓ ஜெப் பெசோசை பற்றி தான் கூறுகிறாரா என்று பலர் கேள்வியெழுப்பிய நிலையில் ஏதன் அமேசானில் பணிக்கு சேர்வதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம் குறித்து இங்கு கூறியுள்ளார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ள்ளது. 

     

     

    • கடந்த வருடம், புளோரிடா மாநிலத்திற்கு பெசோஸ் குடி பெயர்ந்தார்
    • வாஷிங்டனில் பங்கு விற்கும் வருவாயில் 7 சதவீதம் வரி செலுத்த வேண்டும்

    1994ல் அமெரிக்காவில் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) உருவாக்கிய நிறுவனம், அமேசான் (Amazon).

    2021ல் இந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகினார். பெசோஸ் விலகியதை தொடர்ந்து ஆண்டி ஜாசி (Andy Jassy) தலைமை செயல் அதிகாரியாக அமேசானை நிர்வகித்து வருகிறார்.

    இந்நிலையில், தற்போது 60 வயதாகும் ஜெப் பெசோஸ், தன் வசமிருந்த அமேசான் நிறுவன $4 பில்லியன் மதிப்புடைய பங்குகளை விற்று விட்டார்.

    கடந்த வருடம், பெசோஸ், வாஷிங்டன் மாநிலத்திலிருந்து புளோரிடா மாநிலத்திற்கு குடி பெயர்ந்தார்.

    வாஷிங்டன் மாநிலத்தில் $250,000 மதிப்பிற்கு மேல் நிறுவனத்தின் பங்குகளை விற்றால், அதற்கு 7 சதவீதம் மாநில வரி செலுத்த வேண்டும். ஆனால், புளோரிடா மாநிலத்தில் பங்குகள் விற்பனையில் ஈட்டும் வருவாய்க்கு மாநில வரி கட்ட தேவையில்லை.

    இதன் மூலம் $280 மில்லியன் மதிப்பிலான தொகையை பெசோஸ் சேமிக்க முடியும்.

    2021ல் தனது பங்குகளில் கணிசமானவற்றை விற்ற பெசோஸ், தற்போது பெருமளவு மீண்டும் விற்றுள்ளார். தனது பங்குகளை விற்பனை செய்த நிலையிலும் அமேசானின் பிரதான பங்குதாரராக ஜெப் பெசோஸ் உள்ளார். அவரது நிகர மதிப்பு சுமார் $190 பில்லியனுக்கும் மேல் உள்ளது.

    1994ல் நியூயார்க் நகரில் இருந்து சியாட்டில் நகருக்கு செல்லும் ஒரு பயணத்தின் போது பெசோஸ், இணையதளம் வழியாக புத்தகங்களை வாங்கவும், விற்கவும் ஒரு நிறுவனத்தை தொடங்க எண்ணி உடனடியாக செயல்பட தொடங்கினார்.

    அவ்வாறு உருவான அமேசான், இன்று இணையவழி சில்லறை வணிகத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக அமேசான் நிறுவன பங்குகள் அமெரிக்க பங்கு சந்தையில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • 2.8 ஏக்கர் நிலப்பரப்பில் 9259 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது
    • சில மாதங்களுக்கு முன்பு லாரன் சான்செசுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான வைர மோதிரம் வழங்கினார்

    உலக பணக்காரர்களில் 3-வது இடத்தில் அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் உள்ளார். இவர் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெப் பெசோஸ் தனது வருங்கால மனைவிக்காக சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இந்தியன் க்ரீக் தீவில் உள்ள பங்களாவை ரூ.564 கோடிக்கு வாங்கினார்.

    1965-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களா 1985-ம் ஆண்டு விரிவுப் படுத்தப்பட்டது. இது 2.8 ஏக்கர் நிலப்பரப்பில் 9259 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    3 படுக்கை அறைகளும், 3 குளியல் அறைகளும் கொண்ட இந்த பங்களாவில் சொகுசு வசதிகள் உள்ளன. மேலும் பங்களாவை புதுப்பித்து புதிய மெகா மாளிகையை ஜெப் பெசோஸ் உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு லாரன் சான்செசுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை வழங்கி காதலை வெளிப்படுத்தினார். தற்போது காதலிக்காக சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார்.

    ×