search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்தரப்பு"

    • ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
    • மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 28). திருமணமானவர். வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. செல்போனை எடுத்து பேசியபோது, எதிர்தரப்பில் இருந்து ஆண் நபரின் குரல் கேட்டது. அவர் எண்களை தவறாக போட்டதால் தனக்கு போன் வந்ததை உணர்ந்த அனிதா, அவரிடம் அதனைக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் தினமும் போன் செய்துள்ளார். புதுவை வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். இது நட்பாக மாறி நாளடைவில் கள்ள க்காதலாக மாறியுள்ளது.

    இதனையடுத்து இருவரும் சந்திக்க திட்டமிட்டு, நேற்று ஆரோவில் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனிதா திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது, கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை காணவில்லை. மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, ஸ்ரீதருக்கு போன் செய்துள்ளார். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன அனிதா, இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×