என் மலர்
நீங்கள் தேடியது "தீயணைப்பு துறையினருக்கும் தகவல்"
- ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ஆந்திரா மாநிலம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காதர் பாஷா (வயது 70). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக காதர் பாஷா தனது உறவினர்கள் நபி பாஷா அகமது பாஷா, அபிஷா, அம்மாஜி ஆகியவுடன் ஆம்புலன்ஸ் மூலம் இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.
அதே வழியாக கடப்பா கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லோடு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்புலிப்பாக்கம் அருகே வரும்போது லோடு லாரியும், ஆம்புலன்சும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டீசல் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து ஆம்புலன்ஸ் பற்றி எரிந்தது. அப்போது திடீரென ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சிவா மற்றும் சுனில், ஊழியர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அவளூர் போலீசருக்கும், காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்சை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து அணைக்க முயன்றனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் இந்த விபத்து குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.