என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சன்னி தியோல்"
- ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது.
- தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகிறது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை பிரபல இயக்குனரான நிதேஷ் திவாரி இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகிறது.
இதை முதலில் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ், அல்லு அரவிந்த் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மூவரும் பிரிந்தனர். இதனால் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து இதைத் தயாரிக்கிறது.
இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது, 2 பாகங்களாகத் தயாராகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ரன்பிர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் புகைப்படங்கள் சில வாரங்களுக்கு முன் வைரலானது.
ஆனால் தற்பொழுது வந்த தகவலின்படி இந்தப் படத்துக்கான காப்புரிமை தொடர்பாக, தயாரிப்பாளர் மது மண்டேனா, நமித் மல்ஹோத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். படத்தின் ஸ்கிரிப்ட் உரிமை தங்களிடம் இருப்பதாகவும், வேறு யாரும் அதைப் பயன்படுத்தினால், அது காப்புரிமை மீறல் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காப்புரிமை பிரச்சினை பேசி தீர்க்கப்பட்ட பின் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்கிறார்.
- ப்ரீத்தி சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் வரலாற்று இந்தி திரைப்படம் ''லாகூர், 1947 '.சன்னி தியோல், ராஜ்குமார் சந்தோஷி மற்றும் அமீர் கான் ஆகிய மூவரும் இந்தப் படத்திற்காக முதன்முறையாக இணைந்துள்ளனர்.
,நீண்ட நாட்களுக்குப் பிறகு சன்னி தியோல் - ப்ரீத்தி ஜிந்தா ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இருவரும் போர்ஸ், தி ஹீரோ , பையாஜி சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர் .
இந்த படத்தில் நடிப்பது தொடர்பான புகைப்படங்களை ப்ரித்தி ஜிந்தா இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு செட்களில் இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படத்தின் 'கிளாப் போர்டு' அதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியுடன் செல்பி எடுத்த படம் அவர் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் இப்படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ப்ரீத்தி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தில் மேலும் மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அலி பசல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இப்படம் மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 55.99 கோடி ரூபாய்க்காக ஏலம் விடப்படும் என நேற்று அறிவிப்பு
- இன்று காலை அந்த அறிவிப்பு திரும்பப்பெறுவதாக பரோடா வங்கி அறிவித்தது
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல். இவர் பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2022-ல் இருந்து பேங்க் ஆஃப் பரோடாவில் சுமார் 55.99 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சன்னி தியோல் தந்தை தர்மேந்திரா வங்கியில் தனி உத்திரவாதம் அளித்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்தாததால், ஜூகுவில் உள்ள அவரது பங்களாவை, வங்கி நேற்று முடக்கியது. அத்துடன் வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என அறிவிப்பையும் வெளியிட்டது.
ஆனால், இன்று காலை தொழில்நுட்ப காரணமாக ஏலம் அறிவிப்பு திரும்பப் பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதா எம்.பி. என்பதால் வங்கி உடனடியாக திரும்பப்பெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''56 கோடி ரூபாய் வாங்கிய கடனை கட்டத் தவறியதால், சன்னி தியோலின் பங்களா ஏலம் விடப்பட இருக்கிறது என்ற செய்தியை நேற்று நாட்டு மக்கள் கேட்டனர். இன்று காலை, 24 மணி நேரத்திற்குள், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, வங்கி அதன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற்றது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்கின்றனர்.
இந்த 'தொழில்நுட்ப காரணங்களை' தூண்டியது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?'' எனப் பதிவிட்டுள்ளார்.
- நிலுவை தொகையை மீட்பதற்காக சன்னி தியோலுக்கு சொந்தமான பங்களாவை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- ங்களா வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என வங்கி தரப்பில் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
இந்தி நடிகர் சன்னி தியோல் நடித்து சமீபத்தில் வெளிவந்த கதார் 2 திரைப்படம் 'ஹிட்' ஆகி வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் சன்னிதியோலுக்கு சொந்தமாக மும்பை ஜூகு காந்தி கிராம் சாலையில் உள்ள பங்களாவை அவர் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்தார். அந்த பங்களாவுக்காக அவர் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கடன் வாங்கி இருந்தார்.
அந்த பணத்தை சன்னி தியோல் முறையாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ரூ.56 கோடிக்கு மேல் செலுத்தப்படாமல் நிலுவை தொகை இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து நிலுவை தொகையை மீட்பதற்காக சன்னி தியோலுக்கு சொந்தமான பங்களாவை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி அவரது பங்களா வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என வங்கி தரப்பில் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
சன்னி தியோலின் உண்மையான பெயர் அஜய்சிங் ஆகும். அஜய்சிங் பெயரில் தான் பங்களாவும் இருக்கிறது. எனவே அந்த பெயரில் ஏலம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் திடீரென ஏல அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பேங்க் ஆப் பரடோ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்