search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகொரியா திட்டம்"

    • தென் கொரியா, வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.

    தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு குப்பைகள் நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.


    இந்த நிலையில் தென் கொரியாவுக்குள் மீண்டும் குப்பை பலூன் ஏவப்பட்டது. இந்த பலூன் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் விழுந்தது. அந்த குப்பையில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்று தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடகொரிய பலூன் தரையிறங்கும் போது அதிபர் யூன் சுக் இயோல் அந்த வளாகத்தில் இருந்தாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.

    வட கொரியா ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலூன்களை மிகவும் துல்லியமாக உத்தேசித்துள்ள இடங்களில் தரையிறக்க தொடங்கியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது.
    • அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை

    அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது. ஆனால் ராக்கெட் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில் உளவு செயற்கை கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டு உள்ளது.

    இது தொடர்பாக ஜப்பான் அதிகாரிகள் கூறும்போது, வடகொரியா வரும் நாட்களில் உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளது என்றனர்.

    வருகிற 24-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்து வடகொரியா அதிகாரிகள் தெரிவித்ததாக ஜப்பான் கடலோர காவல் படை கூறியுள்ளது.

    அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்று கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் ஹிரோ முனே கிகுச்சி தெரிவித்தார். ஆனால் அந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் ஏவப்பட்ட உளவு செயற்கைக் கோளை போலவே இருக்கலாம் என்று நம்புகிறேன் என்றார்.

    ×