என் மலர்
நீங்கள் தேடியது "சுகன்யா"
- ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
- பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா செய்துள்ளார்.
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.
பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் வீடியோவாக வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா செய்துள்ளார்.
பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, "500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்," என்று கூறினார்.
- மறுமணம் என்ற எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை.
- வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை வேண்டும்.
"தமிழில் புது நெல்லு புது நாத்து" படம் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகமான சுகன்யா, திறமையான நடிப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2002-ல் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். இந்த நிலையில் சுகன்யா மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து சுகன்யா கூறும்போது, ''கணவருடனான திருமண பந்தம் சரியாக பொருந்தவில்லை எனில் பெண்கள் அதில் இருந்து விலகிவிடுவது நல்லது. இந்த சமூகத்துக்கு கட்டுப்பட்டு எல்லாவற்றையும் சகித்து போவதால் பல தற்கொலைகள் அரங்கேறி இருக்கின்றன.
சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விண்ணப்பித்து பல ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது.
மறுமணம் என்ற எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை. அதற்காக மறுமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் சொல்லவில்லை. இன்னும் 2 மாதங்களில் 50 வயதை எட்டிவிடுவேன்.
இதற்கு பிறகு திருமணம் செய்து, குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா? அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? என்று குழப்பமாக இருக்கிறது. இது சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்றாலும், நடைமுறையில் சில விஷயங்களை எண்ணி பார்க்கத்தான் வேண்டியதுள்ளது.
வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை வேண்டும். எனவே மறுமணம் செய்வேனா? இல்லையா? என்பதை என்னால் சொல்லமுடியாது. என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அவ்வளவுதான்''என்றார்.