search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை கடல் கொள்ளையர்கள்"

    • எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர்.
    • பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து பல்வேறு விசை படகுகள், பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று தங்களது வாழ்வை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் மற்றொரு பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு பல படகுகளில் வரும் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் அவர்கள் படகுகளில் வைத்துள்ள மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்கள் 15 பேர் நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×