search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் கவர்னர்"

    • கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
    • மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விவகாரம் என்றது.

    புதுடெல்லி:

    கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது:

    மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விவகாரம். அரசின் செயல்பாடுகளை எவ்வாறு முடக்க முடியும்?

    ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் பாராளுமன்ற ஜனநாயகத்தை தொடர முடியுமா? இது மிகவும் தீவிரமான விவகாரம்.

    மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதும், கூட்டத்தொடர் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறுவதும் நெருப்புடன் விளையாடுவது போன்றது என தெரிவித்துள்ளது.

    நெருப்புடன் விளையாடுகிறீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களால் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என கண்டனம் தெரிவித்தது.

    • குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்து செய்யப்படும்
    • அரசியலமைப்பின் கீழ் கவர்னருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன்

    பா.ஜனதா அல்லாத கட்சி ஆட்சி செய்து வரும் பல மாநிலங்களில், அம்மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இது தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    கவர்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு பகவந்த் மான் அரசு சார்பில் பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்து கவர்னர் பல்வாரிலால் புரோகித் அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் "நான் எழுதிய கடிதத்திற்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை என்றால், அரசியலமைப்பு எந்திரம் தோல்வியடைந்ததாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்வேன். மேலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-ன்படி கிரிமினல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்து செய்யப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், "அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன். எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். உங்களை எச்சரிக்கிறேன் மற்றும் எனது கடிதங்களுக்கு பதிலளிக்கவும், கோரப்பட்ட தகவல்களை எனக்கு வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

    ×