என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்பேஸ் எக்ஸ்"
- டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடியாக செல்லும் விமானத்தின் பயண தூரம் 15 மணி நேரம் ஆகும்.
- ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல்-டீசலுக்கு மாற்றாக தனது டெஸ்லா காரை பேட்டரிகள் மூலம் இயக்கி வருகிறார். அதுவும் இந்த கார் டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும்.
உலகம் முழுவதும் இந்த டெஸ்லா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் தற்போது தண்ணீர் மூலம் கார் என்ஜின்கள் தயாரிக்கும் பணியினை அவரது நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் மனித சிந்தனைகளை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் மனித மூளையில் சிப் வைத்து பரிசோதனை செய்து வருகிறார். அதன் ஆரம்பகட்ட பரிசோதனை வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார்.
அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசாவிற்கு இணையாக விண்ணில் ராக்கெட்டுகள் மற்றும் சாட்டிலைட்டுகளை செலுத்தி வருகிறது. அவரது சாட்டிலைட் மூலம் உலகின் எந்த பகுதியிலும் இணையதள வசதிகளை பெற முடியும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க், டிரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு அதிக நன்கொடையும் வழங்கினார். அதற்கு பிரதிபலனாக எலான் மஸ்க்-கிற்கு டிரம்ப் ஆட்சியில் சிறப்பு திறன் துறை என்ற ஒரு துறை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்திற்கு லோகோ வடிவமைப்பு செய்த டெஸ்லா என்ஜினீயர் அலெக்ஸ் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும். இதன்மூலம் மக்கள் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் நியூயார்க் நகரில் காலை 6.30 மணிக்கு பயணிகள் ஒரு கப்பலில் ஏறுகின்றனர். அந்த கப்பல் அவர்களை அழைத்து கொண்டு கடலில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு வருகிறது. பின்னர் பயணிகள் ராக்கெட்டில் ஏற்றப்பட்டு, விண்ணில் புறப்படுகின்றனர். அந்த ராக்கெட் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து ஷாங்காய் நகரை 39 நிமிடத்தில் அடைந்து விடுகிறது.
அந்த வீடியோவில் இந்த ராக்கெட் மூலம் பயணம் செய்தால் ஒவ்வொரு நகரங்களுக்கு இடையே எவ்வளவு மணிக்குள் சென்றுவிடலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி டெல்லி-சான்பிரான்சிஸ்கோ 40 நிமிடங்கள், லண்டன்-நியூயார்க் 29 நிமிடங்கள், டோக்கியோ-டெல்லி 30 நிமிடங்கள் என பல நகரங்களுக்கான பயண நேரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
தற்போது டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடியாக செல்லும் விமானத்தின் பயண தூரம் 15 மணி நேரம் ஆகும். ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும். இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் எலான் மஸ்க், "இது இப்போது சாத்தியம்" என பதில் அளித்துள்ளார்.
அவரின் எதிர்கால திட்டத்திற்கான முன்னோட்டம் தான் இந்த வீடியோ வெளியீடு என்று எக்ஸ் பக்கத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
- ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை டெக்சாசின் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது.
- ராக்கெட் சோதனையை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நேரில் பார்வையிட்டார்.
வாஷிங்டன்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டின் 6-வது சோதனை தெற்கு டெக்சாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாகப் பிரித்தது.
சூப்பர் ஹெவி பூஸ்டர் என அழைக்கப்படும் முதல் நிலை, ஏவுதளத்திற்குத் திரும்புவதற்குப் பதிலாக மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கியது.
ஸ்டார்ஷிப் 2-ம் நிலை அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குள் உலகத்தை பாதியாகச் சுற்றி ஒரு துணைப் பாதையை அடைந்தது. ஏவப்பட்ட சுமார் 65 நிமிடங்களுக்குப் பிறகு விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கப்பட்டது. இதில் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் வெப்ப கவச் சோதனைகளை நடத்தியது. வளிமண்டல மறு நுழைவின் கடுமையான சூழ்நிலைகளில் வாகனத்தின் செயல்திறன் பற்றிய அத்தியாவசிய தாவுகளை சேகரித்தது.
இந்நிலையில், இந்த ராக்கெட் சோதனையை அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் எலான் மஸ்க்கும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 8 நாள் பயணமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பட்டார்கள்.
- அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியிருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சாண்டா தொப்பிகளுடன் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். நாசா வெளியிட்ட வீடியோவில் சுனிதா வில்லியம்ஸ் சிவப்பு சட்டை அணிந்திருப்பதையும், மற்ற மூவர் சாண்டா தொப்பியை அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் இந்த வீடியோ இணைய வாசிகளிடையே பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 8 நாள் பயணமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள், தொழிநுட்ப பழுது காரணமாக பல மாதங்களாக அங்கேயே சிக்கியுள்ளனர்.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்தான் மீண்டும் அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா கூறி வருகிறது. எனவே 8 நாள் பயணத்துக்கு திட்டமிட்ட நாசா அவர்கள் விண்வெளியில் சிக்குவார்கள் என்று தெரிந்தே டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ்-க்கு தேவையான அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள நாசா நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று டன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என்றும், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பிற அலங்காரங்கள் மற்றும் பரிசுகள் வீரர்களுக்கு அனுப்பப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தொகுப்பில் வான்கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், பிஸ்கட் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன. இது தவிர, சில பணி சார்ந்த மற்றும் தொழிநுட்ப்ப பொருட்களும் அவர்களுக்கு இதில் அனுப்பி வைக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக நிலவில் முதலில் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது ரஷியா மற்றும் உலக நாடுகளை ஏமாற்ற ஒரு அறைக்குள் வைத்து அமெரிக்க அரங்கேற்றிய நாடகம் என்ற ஒரு கண்ணோட்டமும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

- இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
- 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.
பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.
இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
- சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ -9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள்.
- ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் செல்கிறார்.
விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.
ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவர் இருவரும் மார்ச் 16 ஆம் தேதி பூமி திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள்.
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ -9 மிஷன்:
நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலம் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
அந்த விண்கலத்தில் இரண்டு இருக்கைகள் சுனிதா மற்றும் வில்மோருக்காக காலியாக விடப்படும். அந்த விண்கலத்தில் அவர்கள் நால்வரும் மீண்டும் பூமிக்கு தியூரம்புவதாக திட்டம். அதன்படி அவர்கள் நான்கு பேரும் மார்ச் 16 அன்று ஒன்றாகத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் இன்று (செய்வ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது என்று அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
மேலும், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாவும் ஏர்டெல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.