என் மலர்
நீங்கள் தேடியது "அருண் வீரப்பன்"
- 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அருண் வீரப்பன்.
- 90 வயதான அருண் வீரப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார்.
பழம் பெரும் தயாரிப்பாளரான ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளை அருண் வீரப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார்.
ஏ.வி.எம். தயாரித்த படங்களின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய அருண் வீரப்பன் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். இவர் 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.
90 வயதான அருண் வீரப்பன் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அருண் வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி" என்று பதிவிட்டுள்ளார்.
ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 28, 2023
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக… pic.twitter.com/xhjomG3PE3