என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பட்டியலினத்தவர் ஆணையம்"

    • ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் பி.வெங்கடேசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
    • விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

    திருச்சியில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் ஆ.ராசா அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் பி.வெங்கடேசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    புகார் குறித்து விசாரித்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையம், இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

    ×