என் மலர்
நீங்கள் தேடியது "தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்"
- ஆசிய தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் நாளை மோதுகின்றன.
- இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.
வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஆசிய அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளும்.
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
கேஎல் ராகுல் மிகவும் நன்றாக முன்னேறி வருகிறார். ஆனால் ஆசிய கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிராக அவர் விளையாடமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.