என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறை தீர்வு கூட்டம்"

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது
    • பொதுமக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளியது.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்தனர்.

    இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் கலெக்டரை தவிர பிற துறை அதிகாரிகள், பொதுமக்களின் குறைகளை கவனிக்காமல் செல்போனில் மூழ்கினர்.

    குறிப்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தனது செல்போனில், சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்தது பொதுமக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளியது.

    அதே போல பல அதிகாரிகள் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் பொது மக்களிடையே உள்ள நிலையில், அதில் பங்கேற்க வரும் அரசு அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கவனிக்காமல் செல்போனில் மூழ்குவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×