search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.சி.சி.ஐ."

    • ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்து இருந்தது.
    • எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்ற தகவல் இல்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியுடனான தனது பயணத்தை நீட்டிப்பது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்து இருந்தது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கான பதவிக்காலம் முடிந்தது. இதையொட்டி ராகுல் டிராவிட் உடன் நடத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்கிறோம்," என்று தெரிவித்து இருந்தது.

     

    எனினும், இந்த அறிக்கையில் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தம் எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், "அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனாலும் நான் இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. பி.சி.சி.ஐ.-இடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆவணங்கள் வரட்டும்," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • 2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது.
    • உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் போட்டிக்கான அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனையில் நான்கு லட்சம் டிக்கெட்கள் விற்பனைக்கு திறக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது. ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளுக்கான டிக்கெட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதை பி.சி.சி.ஐ. உணர்ந்து கொண்டுள்ளது.

    மாநில கூட்டமைப்புகளுடன் ஆலோசனைகளை முடித்த பிறகு, சுமார் நான்கு லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் முடிந்தவரை அதிக ரசிகர்களுக்கு டிக்கெட்களை விற்பனை செய்யவும், அவர்களை முடிந்தவரை வரலாற்று சிறப்புமிக்க தொடரில் கலந்து கொள்ள செய்ய முடியும்.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான போட்டிகளுக்கு பொது பிரிவு டிக்கெட் விற்பனை செப்டம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. ரசிகர்கள் https://tickets.cricketworldcup.com. வலைதளத்தில் வாங்கிட முடியும். அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் இதே போன்று குறுகிய காலக்கட்டத்தில் அறிவிக்கப்படும்.

    2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
    • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 8-ம் தேதி விளையாடுகிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், இந்திய அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணியின் முதல் போட்டி மட்டுமின்றி சென்னையில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டிக்கான டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

    2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி, நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னணி வீரர்களும் தங்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.  

    ×