என் மலர்
நீங்கள் தேடியது "தேவாலயத்தில் கொடியேற்றம்"
- போடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
- 7-ந் தேதி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
செப்டம்பர் 8-ம் தேதி தேவமாதா பிறந்த தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து ஆர்.சி கிறிஸ்துவ தேவாலயங்களிலும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
போடி பார்க் நிறுத்தம் அருகில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் இருந்து தேவமாதா உருவம் பொறித்த கொடி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழிபாட்டுடன் தேவாலய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 7-ந் தேதி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற உள்ளது.