search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.எஸ்.ஓ.’ தரச்சான்று"

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • பொதுமக்களின் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண்பதால் முடிவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் போலீஸ் நிலையத்திற்க்கு பொதுமக்களின் புகார்களை 2 தினங்களில் விசாரணை செய்து தீர்வு காண்பது, பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் உரையாடுவது, போலீஸ் நிலையத்தை சுகாதாரமாக வைத்துள்ளது உள்ளிட்டவற்றை பாராட்டி ஐ.எஸ்.ஓ. சான்று வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஐ.எஸ்.ஓ. தணிக்கையாளர் பி.கார்த்திகேயன் பாணாவரம் போலீஸ் ஸ்டேஷனை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியிடம் தரச்சான்றிதழை நேற்று வழங்கினார்.

    கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ் அசோக், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் பலர் உடனிருந்தனர்.

    ×