என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமையல் கியாஸ் சிலிண்டர்"
- தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும்.
- தேர்தல் சமயத்தில் சிலிண்டர் விலை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்காத மத்திய அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 விலையை குறைத்து அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும். அப்படி வழங்கும்பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயன்படுத்தும் லட்சக்கணக்கான குடும்பங்களும் கூடுதல் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தேர்தல் சமயத்தில் சிலிண்டர் விலை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்காத மத்திய அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 விலையை குறைத்து அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்த மத்திய அரசுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கி றேன்.
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.
- கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியது.
- மத்தியஅரசின் இந்த விலை குறைப்பு கேரள மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வந்தது.
திருவனந்தபுரம்:
சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியது.
இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மத்தியஅரசின் இந்த விலை குறைப்பு கேரள மாநிலத்திலும் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் 1,100 ரூபாயக்கு மேல் விற்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தில் ரூ.911-க்கும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் ரூ.912-க்கும், ஆலப்புழா மற்றும் திருச்சூரில் ரூ.915-க்கும், பத்தினம்திட்டா மற்றும் கொச்சியில் ரூ.920-க்கும், பாலக்காட்டில் ரூ.921-க்கும், கண்ணூர், காசர்கோடு மற்றும் வய நாட்டில் ரூ923-க்கும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்