என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மலப்புரம் குஞ்சீரும்மா"
- உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 116 வயதான மூதாட்டியான மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார்.
- 5 தலைமுறைகளை கண்டுள்ள குஞ்சீரும்மாவுக்கு தற்போது வரை கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் நன்றாக இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 116 வயதான மூதாட்டியான மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி கேரள மூதாட்டி குஞ்சீரும்மா உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
குஞ்சீரும்மா பள்ளிக்கு செல்லவில்லை. அவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆகி உள்ளது. கலம்பன் செய்தலி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். அவர்களுக்கு மொத்தம் 13 குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் 7 பேர் இறந்து விட்டனர்.
5 தலைமுறைகளை கண்டுள்ள குஞ்சீரும்மாவுக்கு தற்போது வரை கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் நன்றாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படாமல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.